தாத்தா ஆனார் சர்ச்சை இயக்குனர்... சரமாரியாக வாழ்த்தும் தெலுங்கு திரையுலகம்

By

சென்னை: பிரபல சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் தாத்தா ஆனார். இதையடுத்து அவருக்கு இயக்குனர் ராஜமவுலி உட்பட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரபல இந்திப் பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஏராளமான தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கியுள்ள பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் ரத்த சரித்திரா என்ற இந்தி படத்தை எடுத்தார். இந்த படம் தமிழிலும் வெளியானது.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

தமிழில் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா, வின்சென்ட் செல்வா இயக்கிய ஜித்தன் ஆகிய படங்களின் கதை இவர் எழுதியதுதான். பல்வேறு உண்மை சம்பவங்களை படமாக்கி வரும் இவர் அடுத்து, திஷா பாலியல் வன்கொடுமை விவகாரத்தை படமாக்க இருக்கிறார். இதுபற்றி அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொடூர கொலை

கொடூர கொலை

அதில், 'எனது அடுத்த படம், 'திஷா'. கொடூரமான திஷா பாலியல் வன்கொடுமை பற்றியது. நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நடந்த கொடூரமான கொலை இது. அந்த பாலியல் வன்கொடுமையாளர்கள் பற்றியும் அவர்கள் ஏன் நிஷாவை கொன்றார்கள் என்பது பற்றியும் எனது படம் விரிவாக பேசும்' என்று தெரிவித்திருந்தார்.

ஒரே மகள் ரம்யா

ஒரே மகள் ரம்யா

இந்நிலையில் அவர் தாத்தா ஆகியுள்ளார். ராம் கோபால் வர்மாவின் மனைவி ரத்னா. பின்னர் இவரை விவாகரத்து செய்துவிட்டார் வர்மா. இவர்களின் ஒரே மகள் ரம்யா. இவர் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறார். இவரும் அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் பிரணவும் காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

ராஜமவுலி

ராஜமவுலி

இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் இவர்களுக்கு இப்போது அழகானப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தாத்தா ஆகியுள்ள இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ராஜமவுலி தனது வாழ்த்துகளை ட்விட்டரில் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X