அவரு வெட்கப்படுறதை இப்போதான் பாக்குறேன்.. மணிரத்னத்தை வம்பிழுக்கும் சர்ச்சை இயக்குநர்!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணி ரத்னத்தை வம்பிழுத்துள்ளார் சர்ச்சை இயக்குநரான ராம் கோபால் வர்மா.
சில நடிகைகளுக்கு போட்டியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருபவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஜினி, பவன் கல்யாண், சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் குறித்து பல்வேறு சமயங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சிகரெட்டை..
கடந்த 5ஆம் தேதி இரவு பிரதமர் மோடி மின் விளக்குகளை அணைத்து விட்டு தீபம் ஏற்ற சொன்னார். அப்போது கூட மின் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு சிகரெட் பற்றவைத்தார். அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகையுடன் போட்டோ
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்தை வம்பிழுத்துள்ளார். அதாவது காற்று வெளியிடை படத்தின் போது ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகை அதிதிராவ், இயக்குநர் மணிரத்னத்திடம் மண்டியிட்டு ரோஜா பூவை நீட்டும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இப்போதுதான் பார்க்கிறேன்
தன்னிடம் பூவை நீட்டும் அதிதிராவின் கன்னத்தில் கை வைத்திருக்கிறார் மணிரத்னம். இந்நிலையில் இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. அதோடு மிகவும் சீரியஸான மணிரத்னம் வெட்கப்படுவதை இப்போதுதான் பார்க்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
காதலிக்கும் ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மாவை தீவிரமாக காதலித்து வருகிறார். தன்னுடைய காலை பிடித்து தன்னை தேவதை என்று ராம்கோபால் வர்மா வர்ணித்ததாக கூறிய ஸ்ரீரெட்டி, தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இருப்பினும் அவரை மறக்க முடியாமல் படுக்கைக்கு அழைத்தார் ஸ்ரீரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











