ஏலியன்ஸ் தாக்குதல் மட்டும்தான் மிச்சம்.. விசாகப்பட்டினம் வாயு கசிவு குறித்து சர்ச்சை இயக்குநர்!

சென்னை: விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு குறித்து பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

விசாகப்பட்டினம் விஷ வாயு விபத்துக்கு இப்படி ஒரு காரணமா | The reason for gas leak from Vishakhapatnam

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. தனது திரைப்படங்களிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி துணிச்சலாக கருத்துக்களை கூறி வருகிறார் ராம்கோபால் வர்மா.

அண்மையில் பிரதமர் மோடி வீட்டில் விளக்கு ஏற்றச் சொன்னபோது கூட, வீட்டில் மின் விளக்குகளை அனைத்து விட்டு, சிகரெட்டை பற்ற வைத்தார். இதனால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானார் ராம் கோபால் வர்மா.

பாலியல் ரீதியாக

பாலியல் ரீதியாக

டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு பெண்கள் வரிசையில் நின்ற போட்டோவை ஷேர் செய்து பாலியல் ரீதியாக கருத்து தெரிவித்து வாங்கிக்கட்டினார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் ரசாயண கசிவு ஏற்பட்டது குறித்து பிரபலங்கள் பலரும் தங்களின் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.

ஏலியன் மட்டும்தான்

ஏலியன் மட்டும்தான்

அந்த வகையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் விஷ வாயு கசிவு குறித்து வரிசையாக டிவிட்டியிருக்கிறார். அதில் அவரது முதலாவது டிவிட்டில், வைரஸ் தாக்குதலுக்கு பிறகு இப்போது வாயு தாக்குதல்.. இன்னும் ஏலியன்ஸ் தாக்குதல் மட்டும்தான் மிச்சம் இருக்கு போல என கூறியுள்ளார்.

த்ரில்லர் படங்கள்

த்ரில்லர் படங்கள்

ராம் கோபால் வர்மாவின் மற்றொரு டிவிட்டில் சினிமாத் துறை தற்போது மூடப்பட்டுள்ளதால் நிஜ வாழ்க்கையில் த்ரில்லர் படங்களை உருவாக்குவதில் கடவுள் பிஸியாக இருக்கிறார் என விஷ வாயு கசிவு குறித்து தெரிவிள்ளார்.

மூன்று நிறுவனங்கள்

மூன்று நிறுவனங்கள்

ராம் கோபால் வர்மா தனது மற்றொரு டிவிட்டில், மதம், சாதி மற்றும் தேசியம் என்ற பாகுபாடின்றி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லும் 3 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன, அவை தீவிரவாதிகள், வைரஸ்கள் மற்றும் கடவுள் என குறிப்பிட்டுள்ளார்.

மனப்பிரச்சனைகள்

மனப்பிரச்சனைகள்

தொடர்ந்து விஷ வாயு கசிவு குறித்து டிவிட்டிய ராம் கோபால் வர்மா, கொடிய வைரஸ்களை உருவாக்கி, வாயு கசிவு விபத்துக்களை ஏற்படுத்தும் விதத்தில் கடவுள் சில மனநல பிரச்சினைகளை உருவாக்கவில்லை என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

நாம் பயப்படுவதால்..

நாம் பயப்படுவதால்..

அவரது மற்றொரு டிவிட்டில் இயற்கையின் ஒவ்வொன்றையும் உருவாக்கியவர் மற்றும் கட்டுப்படுத்துபவர் கடவுள், எனவே வைரஸும் வாயுவும் அவரின் செயலாகும் ..ஆனால் நாம் பயப்படுவதால் கடவுளைத் தவிர மற்ற அனைவரையும் குறை கூறுகிறோம்.. என கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X