உனக்கு நடிப்பதற்கு ஆசையிருந்தால் சொல்.. சர்ச்சை இயக்குனர் ட்விட்
சென்னை : இயக்குனர் ராம்கோபால் வர்மா போட்ட ட்விட்டை உடனே நீக்கியதால் ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.
சர்ச்சை மன்னன் ராம்கோபால் வர்மா எது செய்தாலும் மீடியா வட்டாரங்களில் எதிர்வினை கருத்துக்கள் மற்றும் ஆதரவான கருத்துகள் என்று பல சுவாரஸ்யங்களை செய்யும் விந்தை மனிதர். கான்ட்ரவர்சி என்பது இவர் செயல் பேச்சு எல்லாவற்றிலும் இருக்கும்.

இந்த ஊரடங்கு சமயத்திலும் கூட சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகத்தான் இருக்கிறார். சில நாட்களுக்கு முன், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கூறி ஷாக் கொடுத்தார் . பின்னர் ரசிகர்களை ஏப்ரல் 1க்காக அப்படி சொன்னேன் என வெறுப்பேற்றினார். பல ஜாம்பவான் நடிகர்கள், இயக்குனர்கள், அரசியல் தலைவர்கள் என்று யாராக இருந்தாலும் மிக தைரியமாக எதிர்த்து ட்விட் செய்வது இவரது இயல்பு.

பிரதமர் மோடி அனைவரையும் விளக்கேற்ற சொன்னால் இவர் சிகரெட் பற்ற வைத்து அதிலும் சர்ச்சையை உண்டாக்கி, பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டார். அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் இருப்பதே இவரது ஸ்பெஷாலிட்டி. யார் என்ன திட்டினாலும், பாராட்டினாலும் "ஐ டோன்ட் பாதர் " என்பது தான் இவரது பாலிசி .
சமீபத்தில் டிக்டாக்கில் தன்னை போலவே நடித்து வீடியோ வெளியிட்ட ஒரு பெண், ராம்கோபால் வர்மாவை மிகவும் கவர்ந்துவிட்டார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த வர்மா, "உனக்கு நடிப்பதற்கு ஆசையிருந்தால் சொல், நான் சான்ஸ் தருகிறேன். உன் விபரங்களை ஈமெயில் முகவரிக்கு அனுப்பு" என கூறி ஒரு இமெயில் முகவரியையும் கொடுத்திருந்தார். அந்த ட்விட் சில மணிநேரம் மட்டுமே இருந்தது, திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிறிது நேரத்திலேயே தான் வெளியிட்ட பதிவை வர்மா எடுத்துவிட்டார்.

எதையும் தைரியமாக செய்யும் இவர், ஏன் இந்த ட்விட்டை டெலீட் செய்தார் என்பது ஆச்சரியமான விஷயம் தான். ஒரு வேளை அவருக்கு உடனே மெயில் அந்த பெண்ணிடம் இருந்து வந்து இருக்குமோ? வந்த உடன் காண்டாக்ட் கிடைத்து விட்டது என்று டெலீட் செய்து விட்டாரா என்று பலர் கமெண்ட் செய்கின்றனர். ஆர்.ஜி .வீ படங்களில் நடிக்கும் பெண்கள் கண்டிப்பாக துணிச்சலில் உச்சம் பெற்றவர்களாக தான் இருப்பார்கள். பொறுத்து இருந்து பார்ப்போம். தனது புதிதாக படைப்பில் அந்த பெண்ணை அறிமுகம் செய்கிறாரா என்று.

இவர் இயக்கிய படங்கள், தயாரித்த படங்கள் என்ற ஒரு பெரிய ஹிட் லிஸ்ட் இருக்கிறது. பல ரசிகர்கள் இந்த லாக் டவுன் சமயத்தில் இவரது பல படங்களை பார்த்து வருகின்றனர். இவரது படங்கள் கேமரா ஆங்கிள்ஸ் மற்றும் திரைக்கதை அமைப்பு மிகவும் திகிலூட்டும் விதமாக பெரும்பாலும் இருக்கும். அதற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.


Click it and Unblock the Notifications











