மோடி ட்ரம்பை வைத்து அசத்தல் வீடியோ.. எடிட்டிங்கால் இம்ப்ரஸான இயக்குநர்.. திருமணம் செய்ய விருப்பம்!
சென்னை: பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்பை வைத்து அசத்தல் வீடியோ வெளியிட்ட எடிட்டரை திருமணம் செய்ய விரும்புவதாக சர்ச்சை நடிகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். அப்போது குஜராத் சென்ற அவர் அங்கு திறக்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார்.

அவரை தொடர்ந்து பிரதமர் மோடியும் உரையாற்றினார். அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அப்போதோ இருவர் குறித்தும் ஏராளமான மீம்ஸ்கள் வலைய வந்தன.
இந்நிலையில் மோடியும் ட்ரம்பும் உரையாற்றும் வீடியோவை, தளபதி படத்தின் காட்டு குயிலு மனசுக்குள்ளே பாடலுடன் சேர்த்து பக்காவாக எடிட் செய்துள்ளனர். இருவரின் பேச்சு, பாடி லாங்குவேஜ் ஆகியவை அந்த பாடலுக்கு ஏற்ப கச்சிதமாக எடிட் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்து இம்ப்ரஸ் ஆகியிருக்கிறார் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா. அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் ராம் கோபால் வர்மா, இந்த எடிட்டரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என டிவிட்டியுள்ளார்.

திருமணம் செய்ய விரும்பும் அளவுக்கு ராம் கோபால் வர்மாவை இம்ப்ரஸ் செய்துள்ளது அந்த வீடியோ. ராம் கோபால் வர்மா ஷேர் செய்திருக்கும் இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











