ஏ.ஆர் ரகுமான் செய்த அந்த விஷயம்.. பிரபல இயக்குநர் ஓபனா சொல்லிட்டு.. இப்ப ஜகா வாங்குறாரே!

சென்னை: பாலிவுட் திரையுலகம் குறித்து இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்த கருத்துகள் கடந்த சில தினங்களாக சினிமா வட்டாரத்தில் மட்டும் இன்றி, இந்திய அளவில் அரசியல் வட்டாரத்திலும் பெரிய பேசு பொருளானது. இதனால் பாஜக எம்.பி மற்றும் நடிகையுமான கங்கனா ரனாவத் ஏ.ஆர். ரகுமானை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில் இசைப்புயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. திமுக எம்.பி கனிமொழி தொடங்கி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா உள்ளிட்ட பலரும் ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

இப்படி இருக்கையில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பழைய பேட்டி ஒன்றில் ஏ. ஆர். ரகுமான் குறித்து தெரிவித்த கருத்து ஒன்றை தற்போது வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஏ.ஆர். ரகுமான் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆனால் அவருக்கு பதிலாக அவரது உதவியாளர் தான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரகுமான் வருவதற்கு கால தாமதம் ஆகவே, இந்த வேலை நடைபெற்றுள்ளது.

Director Ram Gopal Varma X Page Post About AR Rahman Controversy

அவரது உதவியாளரின் டியூனும் நன்றாகவே இருந்துள்ளது. அப்போது அங்கு வந்த ரகுமானிடம் இது தொடர்பாக கேட்டதற்கு, நீங்கள் எனது இசைக்கு பணம் செலுத்தவில்லை, எனது பெயருக்குத்தான் பணம் செலுத்துகிறீர்கள். எனது உதவியாளர் அமைத்த மெட்டு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள், நான் உங்களுக்கு வேறு இசை அமைத்துத் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது அந்த சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவரது உதவியாளர் உருவாக்கிய இசையில் உருவான பாடலுக்கான ராயல்டி தொகை தொடர்பான செக் ரகுமானின் மேனேஜரிடம் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதைப் பலரும் தற்போது ரகுமானுக்கு எதிராக கொஞ்சம் வெட்டி, ஒட்டி பகிர்ந்து வருகிறார்கள். இதைப் பார்த்த இயக்குநர் ராம் கோபால் வர்மா, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

Director Ram Gopal Varma X Page Post About AR Rahman Controversy

அதாவது, " ஜெய் ஹோ பாடலின் விஷயத்தில் எனது கருத்துக்களை திரித்து ரகுமானுக்கு எதிராக பரப்பி வருகிறார்கள். எனது பார்வையில் ஏ.அர். ரகுமான் சிறந்த இசையமைப்பாளர். நல்ல மனிதரும் கூட. மற்றவர்களின் உழைப்பிறகும் மரியாதை கொடுப்பவர் அவர்தான். எனது இந்த பதிவு ரகுமான் குறித்த தேவற்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு சிலர் என்னதான் தனது உதவியாளர்களின் உழைப்பு ஏற்ற பணத்தைக் கொடுத்தாலும், இயக்குநர்கள் இவரது இசைக்காகத்தானே வருகிறார்கள், பெயருக்காக இல்லையே என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X