Rajinikanth: அது மட்டும் இல்லன்னா. ரஜினியை மீண்டும் சீண்டிய ராம் கோபால் வர்மா.. கொந்தளித்த ரசிகர்கள்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 50 ஆண்டுகால திரைவாழ்க்கையில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துளளார். தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி என்றாலே நடிப்பை மீறி அவருடைய ஸ்டைல் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

தன்னுடைய நடிப்பால், ஸ்டைலால் இவர் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். தலைவர் என்றும் ரசிகர்கள் ரஜினியை கொண்டாடிவரும் நிலையில் தற்போதும் இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கொண்டாட செய்து வருகின்றன. கடந்த ஆண்டில் லால் சலாம், வேட்டையன் படங்கள் ரஜினி நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன.

Rajinikanth Coolie movie Ram gopal varma

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். இந்தப் படத்தில் இவரது கேரக்டர் மிகச்சிறியது என்றபோதிலும் படத்தின் முக்கியமான காட்சியாக இவரது காட்சிகள் அமைந்திருந்தன. படத்தில் மிகப்பெரிய கேட்டை இவர் திறப்பதாக காட்சி அமைந்திருக்கும். அதுவே இவரது சக்சஸ் பயணத்திற்கான ஓபனிங்காக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தன்னுடைய நடிப்பை மீறி தன்னுடைய கேரக்டரை தன்னுடைய ஸ்டைல், பஞ்ச் டயலாக்குகள் மூலம் மிகச்சிறப்பாக மாற்றும் வித்தை ரஜினிக்கு கைவந்த கலையாக இருந்தது. இதுவே இவரை சூப்பர் ஸ்டாராகவும் கொண்டாட வைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகிவரும் ரஜினிகாந்த் கடந்த ஆண்டிலும் அடுத்தடுத்து லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்களை கொடுத்திருந்தார். இந்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வேட்டையன் படம் சிறப்பான வசூலை பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். படம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ரஜினியை வம்பிழுத்த இயக்குநர்: சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தோடு இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்துவரும் ரஜினிகாந்த், அடுத்தடுத்து விமர்சனங்களையும் எதிர்கொள்ள தவறுவதில்லை. அநத் வகையில் பிரபல தெலுங்குப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, அடுத்தடுத்து ரஜினிகாந்தை சீண்டி வருகிறார். இதன்மூலம் ரஜினி ரசிகர்களின் கண்டனங்களுக்கும் ஆளாகி வருகிறார். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் குறித்து ராம் கோபால் வர்மா பேட்டியொன்றில் பேசியுள்ள கருத்துக்கள் ரசிகர்களை கொந்தளிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் தனக்கு தெரியவில்லை என்றும் அவரை ஸ்டாராக பார்க்கவே ரசிகர்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரஜினியின் ஸ்லோ மோஷன் காட்சிகள்: ஸ்லோ மோஷன் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் நிலைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். பாதி படத்தில் ரஜினிகாந்தை ஸ்லோ மோஷன் காட்சிகளில் பார்க்கவே அவரது ரசிகர்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது ரசிகர்கள் ரஜினியை கடவுளாகவே பார்ப்பதாகவும் அதனால் ரஜினிகாந்தால் சாதாரண கேரக்டர்களில் நடிக்க முடியாது என்றும் ஸ்டாராகவே நடிக்க முடியும் என்றும் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தங்களது கண்டனங்களை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ரஜினி நடிப்பில் உணர்வுபூர்வமான காட்சிகளை வெளியிட்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X