திருமணத்துக்கு முன்பே உறவு வைத்து கொள்வது தவறில்லை.. நடிகை கொடுத்த அட்வைஸ்!

சென்னை: திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்து கொள்வதில் தவறில்லை என நடிகை கொடுத்த பகீர் அட்வைசால் இணையமே திக்குமுக்காடிப் போனது.

மாடல் அழகியான ஸ்ரீ ராபகா ஆந்திர மாநிலம் கோதாவரியில் பிறந்தார். இவர், ஹைதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மாடலில் ஈடுபட்டு வந்தார்.

Director Ram Gopal Varmas movie heroine Sri Rapaka bold comments about before marriage relationship

2017ம் ஆண்டு கிராக் கபடி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர், தொடர்ந்து நடன நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொண்டார்.

நடிகை ஸ்ரீ ராபகா: தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மாவின் நேக்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் 2022ம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவர், சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 7 ஆயிரத்திற்கு அதிகமான பாலோவர்களையும், பேஸ்புக்கில் 7.5K பாலோவர்களும் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

Director Ram Gopal Varmas movie heroine Sri Rapaka bold comments about before marriage relationship

திருமணத்திற்கு முன் உறவு தவறில்லை: இந்நிலையில், சோஷியல் மீடியாவில் இவர் தெரிவித்த கருத்து ஹாட் டாப்பிக்காகி உள்ளது. அதில், நடிகை ஸ்ரீ ராபகா, திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது தவறல்ல. திருமணத்திற்குப் பிறகு கணவன் ஆண் இல்லை என்று தெரிந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவோம் என்று தனது தோழி ஒருவருக்கு நடந்த சம்பவத்தை அதில் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கை வீணாகிவிடும்: அதில், என் தோழி ஒருவர் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், முதல் இரவில் தான் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்தது. இதனால் அவளது வாழ்க்கை வீணாகி விட்டது. திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டு இருந்தால் அவர் அந்த விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்து இருக்கும். திருமணத்தை தவிர்த்து இருக்கலாம்.

Director Ram Gopal Varmas movie heroine Sri Rapaka bold comments about before marriage relationship

ரொம்ப முக்கியம்: ஒவ்வொரு ஆணுக்கும் செக்ஸ் இன்றியமையாதது, இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாதவரை திருமணம் செய்து கொண்டு வருத்தப்படுவதில் என்ன பயன் என்று, நடிகை ஸ்ரீ ரபாகா, உடல் உறவு குறித்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் பலவிதமான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Read more about: naked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X