தமிழில் ரீமேக்காகும் பெங்காலி திரைப்படம்.. இயக்குனர் ராமின் அடுத்த ப்ராஜெக்ட்!

சென்னை : தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் ராம் இப்பொழுது பெங்காலி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பணியாற்ற உள்ளார்.

2019ஆம் ஆண்டு வெளியான "வின்சி டா" என்ற திரைப்படம் பெங்காலி மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது ஹிந்தி, தமிழ் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் ரீமேக் உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்ற அதில் இப்போது இயக்குனர் ராம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

விருதுகளுக்கும் பஞ்சம் இல்லாமல்

விருதுகளுக்கும் பஞ்சம் இல்லாமல்

இயக்குனர் ராமின் முதல் திரைப்படமான "கற்றது தமிழ்" முதல் இன்று வரை தரமான திரைப்படங்களை இயக்கி விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் பஞ்சம் இல்லாமல் தமிழ் சினிமாவை உலக அரங்கில் கொண்டு சென்றவர்.

மூன்று தேசிய விருதுகளை

மூன்று தேசிய விருதுகளை

எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு ராம் உருவாக்கும் ஒவ்வொரு படைப்புகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இவர் இயக்கிய தங்கமீன்கள் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது.

சிறந்த இயக்குனராக

சிறந்த இயக்குனராக

இவ்வாறு சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த ராம், சவரக்கத்தி, சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும் அறிமுகமாகி இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

விருதுகளை வென்று

விருதுகளை வென்று

ராமின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "பேரன்பு" திரைப்படம் உலகில் பல்வேறு நாடுகளில் சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டு பல விருதுகளை வென்று குவித்த நிலையில் இவர் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

தமிழ் ரீமேக் உரிமை

தமிழ் ரீமேக் உரிமை

இந்த நிலையில் சென்ற ஆண்டு பெங்காலியில் வெளியான " வின்சி டா" திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற தனஞ்செயன் அணுகினார்.

இரண்டு நாயகர்கள்

இரண்டு நாயகர்கள்

ஹிந்தி ரீமேக் உரிமையை ஏற்கனவே ஒருவர் வாங்கி விட்டதால் தமிழ் ரீமேக் உரிமையை மட்டும் கைப்பற்றி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் இயக்குனர் ராம் எழுத உள்ளதாகவும், இது இரண்டு நாயகர்களைக் கொண்ட படம் என்பதால், சில நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படத்துக்கான இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X