சூட்டிங்கை நிறைவு செய்த ராம் -நிவின் பாலி கூட்டணி... விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்

சென்னை : தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட உணர்ச்சிப்பூர்வமான படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராம். இவரது படங்களில் லீட் கதாபாத்திரங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். தற்போது நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்களை வைத்து இவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார்.

சிறப்பான இயக்குநர் ராம்

சிறப்பான இயக்குநர் ராம்

தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட உணர்ச்சி காவியங்களை இயக்கியவர் இயக்குநர் ராம். தங்க மீன்கள் படத்தில் தன்னுடைய மகளின் இயல்பான ஆசையை பூர்த்தி செய்யும் சாதாரண தந்தையாக இவர் நடித்தது அனைவரையும் கவர்ந்தது. காட்சி அமைப்புகளிலும், திரைக்கதையிலும் இவரது அதிகப்படியான கவனம் இருக்கும்.

ராமின் அடுத்தப்படம்

ராமின் அடுத்தப்படம்

தற்போது இவர் புரொடக்ஷன் நம்பர் 7 என்ற புதியப் படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகர் நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தை அவர் தயாரித்துள்ளார்.

பிரேமம் நாயகன்

பிரேமம் நாயகன்

இந்தப் படத்தில் பிரேமம் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்துள்ள நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் நடிகை அஞ்சலி. இவர் முன்னதாக ராம் இயக்கத்தில் பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூரியும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

தத்ரூபமான ரயில் செட்

தத்ரூபமான ரயில் செட்

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநராக உமேஷ் ஜே குமார் பணியாற்றியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் பிலிம் சிட்டியில் இவர் தத்ரூபமாக போட்ட ரயில் செட் அனைவரின் பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது.

மிஸ்கின் பாராட்டிய செட்

மிஸ்கின் பாராட்டிய செட்

சமீபத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு திடீர் விசிட் அடித்த இயக்குநர் மிஸ்கின் இந்த செட்டை பார்த்து உமேஷின் கலைநயத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்றுவந்த சூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

நிறைவு பெற்ற சூட்டிங்

நிறைவு பெற்ற சூட்டிங்

இதையடுத்து படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கி, கேரளாவின் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிலையில் சென்னையிலும் சிறப்பான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் டைட்டில் ரிலீஸ்

விரைவில் டைட்டில் ரிலீஸ்

விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராம் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து சினிமா ரசிகர்களை அதிர்வுக்கு உள்ளாக்கிவரும் நிலையில், இந்தப் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X