எல்லா மனிதர்களும் எதிர்பார்ப்பது ஒன்றுதான்.. எதைப்பற்றி சொல்லியிருக்காரு இயக்குநர் ராம்!
சென்னை : இயக்குநர் ராம் சிறப்பான பல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். உணர்வுகளின் தொகுப்பாக இவரது படங்கள் இருக்கும்.
Recommended Video
இவரது பல படங்கள் நமது இதயத்தை நொருக்கக்கூடிய அளவில் கதைக்களத்தை கொண்டு வெளியாகின.
தற்போது நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இவர் புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம், தங்க மீன்கள், பேரன்பு போன்ற உலகத்தரத்திலான படங்களை கொடுத்தவர். இவரது படங்களில் ஆக்ஷன், காமெடி போன்ற மசாலாத்தனங்கள் இருக்காது. மாறாக நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு இவரது படங்கள் அதிகமாக இருக்கும்.

உலகத்தரத்திலான படங்கள்
அந்த வகையில் தங்க மீன்கள், பேரன்பு போன்ற பல சிறப்பான படங்களை இவர் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இதில் தங்க மீன்கள் படத்தில் ராமே முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இவருக்குள் உள்ள நடிகரும் அசாத்தியமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.

அடுத்தப்படம் ரெடி
இந்நிலையில், அடுத்ததாக நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்களை கொண்டு அடுத்தப்படத்தை இயக்கி முடித்துள்ளார் ராம். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தத்ரூபமாக போடப்பட்ட ரயில் செட்
தனுஷ்கோடியில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கேரளா சென்னை என அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகளை முடித்து, மொத்த சூட்டிங்கையும் இறுதி செய்துள்ளது. படத்திற்காக கும்மிடிப்பூண்டியில் தத்ரூபமாக ரயில் செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இயக்குநர் மிஷ்கின் பாராட்டு
இந்த சூட்டிங் ஸ்பாட்டிற்கு திடீரென விசிட்டடித்த இயக்குநர் மிஷ்கின், செட்டை பார்த்து மிரண்டுவிட்டார். இந்நிலையில் தன்னுடைய பேரன்பு படம் குறித்து பேசிய ராம், மனிதர்கள் எப்படி வித்தியாசப்பட்டாலும் அவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தில் ஒன்றுப் படுவதாகவும் அவர்கள் அனைவருக்குமே சாய்ந்துக் கொள்ள ஒரு தோள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதையே பேரன்பு படத்தில் தான் கதைக்களமாக வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











