Director Ram :இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ஸ்னீக் பீக்.. டப்பிங்கை முடித்த படக்குழு!
சென்னை : நடிகர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படத்தை பேரன்பு படத்திற்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துவந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையொட்டி படத்தின் ஸ்னீக் பீக் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ஏழு கடல் ஏழு மலை படத்தின் ஸ்னீக் பீக் : இயக்குநர் ராம் மம்முட்டி நடிப்பில் பேரன்பு என்ற படத்தை கொடுத்திருந்தார். உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். நீண்ட நாட்களாக சூட்டிங் நடத்தப்பட்டு வந்த இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவுற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராபிக்ஸ் வேலைகளால்தான் படத்தின் ரிலீஸ் தாமதமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலியின் டப்பிங் காட்சிகளை இணைத்து படத்தின் ஸ்னீக் பீக்கை படக்குழுவினர் வெளிட்டுள்ளனர். இதில் மிகவும் வித்தியாசமான வாய்ஸ்களில் அவர்கள் டப்பிங் பேசுவதை பார்க்க முடிகிறது. இதையடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராம் படம் என்றாலே அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இந்நிலையில்,இந்த ஸ்னீக் பீக் அதை மேலும் எகிற செய்துள்ளது.

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி என பல படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை படம், சென்னை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீசுக்கு அதிகமான டிமாண்ட் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஸ்னி மற்றும் சோனி லைவ் தளங்கள் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டியிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமின் இயக்கத்தில் தங்கமீன்கள் படம் வெளியாகி மகள்களை பெற்ற அப்பாக்கள் கொண்டாடிய படமாக மாறியது. இந்தப் படத்தில் ராமே நடித்திருந்தார். படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து சில படங்களிலும் நடித்துள்ள ராம், தொடர்ந்து இயக்கத்தையே கையில் எடுத்தார். இவரது இயக்கத்தில்தான் தற்போது ஏழு கடல் ஏழு மலை படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஸ்னீக் பீக்கும் வித்தியாசமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











