மாரி செல்வராஜின் கேள்விகள் எல்லாம் மொக்கைதான்.. அவர் மகன் ஓகே.. ராம் ஜாலி டாக்

சென்னை: மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான வாழை திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அவர் விக்ரமின் மகன் துருவ்வை வைத்து பைசன் - காளமாடன் திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து இயக்குநர் ராம் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தையே தரமாக கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னை பார்க்க வைத்தார். அந்தப் படத்தில் வந்த வசனங்கள், க்ளைமேக்ஸ் ஷாட் என அனைத்துமே பக்காவாக இருந்ததன் காரணமாக படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை முடித்துவிட்டு உண்மை சம்பவத்தை வைத்து அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் வரலாற்றை மாரி செல்வராஜ் திரித்து படத்தில் காட்டிவிட்டார் என்று விமர்சனங்களும் எழுந்தன.

மாமன்னன் மாரி செல்வராஜ்: இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார் அவர். இந்தப் படமும் யாரும் பேசாத அரசியலை பேசியது. உதயநிதிக்கு இது கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். அவரை இன்னொரு பரிணாமத்தில் மாரி செல்வராஜ் காட்டியிருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி அப்ளாஸை அள்ளிக்கொடுத்தது.

Director Ram Trolls Mari Selvaraj at Latest interview
Photo Credit:

கொண்டாடப்பட்ட வாழை: இப்படி மூன்று படங்கள் இயக்கிய அவர் நான்காவது படமான வாழையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பேசினார். அதுவும் பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டது. ஆனால் எழுத்தாளர் சாரு நிவேதிதா உள்ளிட்டோரால் விமர்சனம் செய்யப்பட்டது. அடுத்ததாக அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் - காளமாடன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதனை முடித்துவிட்டு தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார்.

உதவி இயக்குநர்தான்: அவர் தனியாக படம் இயக்க சென்று வெற்றியே பெற்றிருந்தாலும் ராம் இயக்கும் படங்களில் உதவி இயக்குநராகத்தான் வேலை செய்கிறார். பேரன்பு படத்தில் பணியாற்றிய அவர் இப்போது பறந்து போ படத்திலும் வேலை செய்திருக்கிறார். அந்த அளவுக்கு தனது குருநாதர் ராம் மீது பெரிய பாசத்தை வைத்திருக்கிறார். அவர் இல்லையென்றால் நான் இல்லை என்றுதான் வெளியேயும் சொல்வார்.

ராமின் பேச்சு: இந்நிலையில் பறந்து போ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ராமும்,மாரி செல்வராஜும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய ராம், "மாரி செல்வராஜ் கேட்கும் கேள்விகள் எல்லாமே மொக்கையாகத்தான் இருக்கும். இவருக்கு பதிலாக இவரது மகனை அழைத்திருந்தால் மாரியைவிடவும் அவன் நன்றாக கேள்விகள் கேட்பான்" என்றார். அவரது இந்தப் பேச்சுதான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X