50வது படத்திற்காக இயக்குநர் ராமுடன் இணையும் சிம்பு? விரைவில் அறிவிப்பு

சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான ஈஸ்வரன், மாநாடு படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளன.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு ஈஸ்வரன், மாநாடு படங்களில் சிறப்பாக நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களுமே அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக மாநாடு படம் அவரை வெற்றிப்பட நாயகனாக கோலிவுட்டில் ஏற்க வைத்துள்ளது. 100 கோடி க்ளப்பில் படம் இணைந்துள்ளது.

அதிகரித்த சம்பளம்

அதிகரித்த சம்பளம்

இதையடுத்து அவரது மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. சம்பளமும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் சிம்புவை பார்க்க முடிகிறது.

ஐசரி கணேஷ் தயாரிப்பு

ஐசரி கணேஷ் தயாரிப்பு

படத்தை ஐசரி கணேஷ் தன்னுடைய வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்துவரும் நிலையில் படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். காதல் நாயகனாக வலம்வந்த சிம்பு தற்போது தன்னுடைய கேரக்டருக்கு வலு சேர்க்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

பத்து தல சூட்டிங்கில் சிம்பு

பத்து தல சூட்டிங்கில் சிம்பு

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதையடுத்து அடுத்ததாக மார்ச் மாதத்தில் பத்து தல படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் சிம்பு. இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார். தொடர்ந்து தனது 49வது படமான கொரோனா குமார் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கோகுல் இயக்குகிறார்.

சிம்புவின் 50வது படம்

சிம்புவின் 50வது படம்

இதையடுத்து அவரின் 50வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஒவ்வொரு நடிகரும் தனது 50வது படத்தை சிறப்பாக வெளிக்கொண்டுவரவே விருப்பமாக இருப்பார்கள். அந்த வகையில் இந்தப் படம் சிறப்பான படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

ராம் இயக்கத்தில் சிம்பு?

ராம் இயக்கத்தில் சிம்பு?

இதனிடையே சிம்புவின் 50வது படத்தை இயக்குநர் ராம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நிவின் பாலி, அஞ்சலியை வைத்து படத்தை இயக்கிவரும் ராம், அடுத்ததாக சிம்புவை வைத்து அவரது 50வது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராம் சொன்ன கதை பிடித்துப் போய் சிம்பு ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவை கவர்ந்த கதை

சிம்புவை கவர்ந்த கதை

எந்த நெருக்கடியும் இன்றி சிறப்பான வாழ்க்கையை வாழும் ஒரு இளைஞன் தனியாக சென்று அனுபவங்களை பெறும்போது அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X