பாடல், ஃபைட்டுன்னாலே விஜய் பிரைட்டாயிடுவாரு.. இயக்குநர் ரமணா பகிர்ந்த தகவலை பார்க்கலாமா?

சென்னை :நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய பயணத்தை தற்போது சிறப்பாக்கியுள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay | அடுத்த படத்தின் Title இதுதானா? வெறித்தனமா இருக்கே! *Kollywood

ஆரம்பத்தில் இவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட தற்போது தளபதி என்று கொண்டாடி வருகின்றனர். இதற்கு இவர் நடிப்புமீது கொண்ட வெறியே காரணமாக அமைந்தது.

ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்களே இவருக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்தது நாளையத் தீர்ப்பு படத்தில்தான். இந்தப் படத்தில் நடித்தபோது பல எதிர்மறை விமர்சனங்களை தான் பெற்றதாக விஜய்யே பல பேட்டிகளில் கூறியுள்ளார். இந்த நெகட்டிவ் விமர்சனங்களை பாசிட்டிவ் ஆக்கியதே விஜய்யின் வெற்றி ரகசியம்.

பாசிட்டிவ்வான நடைமுறை

பாசிட்டிவ்வான நடைமுறை

எதையெல்லாம் தனது நெகட்டிவ்வாக கூறினார்களோ, அவையனைத்தையும் கடந்து பாசிட்டிவ்வாக முன்னேறியுள்ளார். மாஸ்டர் படத்தின் பாடலில் அவர் கூறியது அவரது வாழ்க்கைக்கும் பொருந்தியது. பாசிட்டிவ்வை மட்டுமே தனது வாழ்க்கையின் அடையாளமாக தற்போது மாற்றியுள்ளார் விஜய்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

தளபதி என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்த உயரத்தை அடைய அவர் மேற்கொண்ட சவால்கள், வலிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அனைத்தையும் கடந்து தற்போது சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைந்து தளபதி 67 படத்திலும் இணையவுள்ளார்.

விஜய்யின் திருமலை படம்

விஜய்யின் திருமலை படம்

விஜய்யின் கேரியரில் பெஸ்ட் படங்களில் ஒன்றாக உள்ளது திருமலை. இந்தப் படத்தில் இயக்குநர் ரமணா டைரக்ஷனில் நடித்திருந்தார் விஜய். வித்யாசாகர் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பான கவனத்தை பெற்ற நிலையில், வாடியம்மா ஜக்கம்மா என்ற பாடலில் கிரணுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார்.

பிரைட்டாகும் விஜய் கண்கள்

பிரைட்டாகும் விஜய் கண்கள்

இந்நிலையில் சாங், ஃபைட் என்று சொன்னாலே விஜய்யின் கண்கள் மிகுந்த ப்ரைட் ஆகிவிடும் என்று இந்தப் படத்தின் இயக்குநர் ரமணா தற்போது தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் சூட்டிங்கின்போது 40 அடியிலிருந்து விஜய் குதிப்பது குறித்து தானும் நடன இயக்குநரும் பேசிக் கொண்டிருந்தபோதே விஜய் உடனே அங்குவந்து ஓகே சொன்னதாக ரமணா தெரிவித்துள்ளார்.

திருமலை படம்

திருமலை படம்

சூப்பர், கண்டிப்பாக இதை செய்கிறேன் என்று அவர் உற்சாகத்துடன் சூட்டிங்கில் பங்கேற்றதாகவும் ரமணா தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். கடந்த 2003ல் வெளியான திருமலை படத்தில் ஜோதிகா, ரகுவரன், விவேக், கௌசல்யா லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X