twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'முன் பின் சேர்த்து பார்த்தால் அர்த்தம் புரியும்'... காஜலின் சர்ச்சை காட்சி பற்றி இயக்குனர் விளக்கம்

    |

    சென்னை : பாரிஸ் பாரிஸ் டீசர் முன்னும் பின்னும் சேர்த்து பார்த்தால் காஜல் செய்தது தவறாக தெரியாது என அப்படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கும் படம் பாரிஸ் பாரிஸ். இந்தி கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான குயின் படத்தின் ரீமேக் தான் இது.

    Director Ramesh Arvind explanation about Paris Paris teaser

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. காஜல் மார்பை பிடித்து ஒரு பெண் அழுத்தும் காட்சி டீசரில் இடம்பெற்றதுதான் அதற்கு காரணம். இந்த காட்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் "டீசரை தனியாக பார்க்கும் போது தான் அப்படித் தெரியும். அந்த காட்சியின் முன், பின் காட்சிகளை சேர்த்து பார்க்கும் போது அதற்கான காரணம் புரியும். ஹிந்தி படத்திலும் இந்த காட்சி இருக்கிறது" என அவர் கூறியுள்ளார்.

    ரமேஷ் அரவிந்த்தின் இந்த விளக்கத்தால் பாரிஸ் பாரிஸ் சர்ச்சை அடங்குமா என்பது கேள்விக்குறியே.

    English summary
    Director Ramesh Arvind says that the controversary scene will definetely get a meaning if it is watched with front and back scenes in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X