சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மாவிற்கு பிறந்தநாள்.. திரைப் பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : இயக்குனர் ராம் கோபால் வர்மாவிற்கு இன்று பிறந்த நாள். இதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பல மாறுபட்ட சினிமாக்களை இந்திய சினிமாவில் இயக்கிய பெருமை இவருக்கு உண்டு அதே நேரத்தில் சர்ச்சைக்கும் பெயர் போன இயக்குனரும் இவர். இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பு கதை என்று பல விஷயங்களில் சினிமா ரசிகர்களை அசர வைத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா.

தெலுங்கு சினிமாவில் இருந்து தனது திரைத்துறை பயணத்தை துவங்கிய ராம் கோபால் வர்மா நாகர்ஜூனாவை வைத்து சிவா என்ற படத்தை எடுத்தார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இந்த படம் மாபெரும் வெற்றிப் பெற்றதால் இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

 ரசிகர்கள் கொண்டாடும் படம்

ரசிகர்கள் கொண்டாடும் படம்

அந்த படம் இந்தியில் ஹிட்டடித்ததால், இந்தி, தெலுங்கு என மாறி மாறி படங்களை இயக்கி வந்தார். 1993ல் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்திற்கு கதை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார். இயக்கி வந்த சமயங்களில் சிறந்த படங்களுக்கு சிறந்த முறையில் கதையும் எழுதி வந்தார் அதே போல் தயாரிப்பிலும் பல சிறந்த படங்களை தயாரித்து இருக்கிறார் ராம் கோபால் வர்மா.

 சர்ச்சை புத்தகம்

சர்ச்சை புத்தகம்

இவர் தமிழில் கதை எழுதிய ஜித்தன் படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு சிறந்த சினிமா பிரபலமாக ஜொலித்த சமகாலத்தில் இருந்தே பல சர்சைகளில் சிக்க வந்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஶ்ரீதேவியை தவறாக தன் புத்தகத்தில் எழுத அப்போது உருவான சர்ச்சையில் போனிகபூர் ராம் கோபால் வர்மாவை கடுமையாக சாடியிருந்தார். இந்த விஷயம் நாடு முழுவதும் மிக பெரிய தீயாய் பரவியது.

 கதை திருட்டு அபராதம்

கதை திருட்டு அபராதம்

மேலும் ராம் கோபால் வர்மா கதையை திருடி படம் எடுத்து விட்டதாக கூறி உயர்நீதிமன்றம் ரூபாய் 10லட்சத்தை அபதாரம் விதித்தது ராம் கோபால் வர்மாவின் ரசிகர்களை ஒரு நிமிடம் அதிர்ந்து போக வைத்தது அதனை யாராலும் மறக்கவே முடியாது. எப்போதும் சர்ச்சை நாயகனாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார் ராம் கோபால் வர்மா. இன்றளவும் அவரது சர்ச்சைக்கு குறைவில்லை.

 சர்ச்சை நாயகன்

சர்ச்சை நாயகன்

பிரதமர் விடுத்த வேண்டுகோள் படி மக்கள் அனைவரும் தங்களின் வீட்டில் மின் விளக்குகளை அனைத்து அகல் விளக்கு ஏற்றியும் டார்ச் லைட் அடித்தும் தங்கள் ஒன்றுமையை வலியுத்தினார். ஆனால் ராம் கோபால் வர்மாவோ சிகரெட்டை பற்ற வைத்து, அதை ட்வீட் செய்து இருந்தார் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

ராம் கோபால் வர்மாவின் பிறந்தநாளான இன்று திரைத்துறையினர் பலரும் இவருக்கு வாழ்த்துகளை இணையத்தின் வாயிலாக கூறி வருகின்றனர். தற்போது ராம் கோபால் வர்மா என்டர் தி கேர்ல் டிராகன் படத்தை இயக்கி இருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக விடுக்கபட்ட ஊரடங்கு முடிந்தவுடன் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹிந்தியில் ஹெகர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X