ராம்கோபால் வர்மாவின் “நேக்ட்“..வெளியான 20 மணி நேரத்தில் 35445 பார்வையாளர்கள் !

ஹைதராபாத்: 'நேக்ட்' திரைப்படம் வெளியாகி வெறும் 20 மணி நேரத்திலேயே 35445 பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளதாக ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Recommended Video

மீண்டும் சர்ச்சை கிளம்பிய Ram Gopal Varma | #RGV

தன்னுடைய படங்களின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் இவர் இயக்கிய இரண்டு படங்களையும் தனது சொந்த சேனலில் வெளியிட்டுள்ளார்.

கிளைமாக்ஸ் மற்றும் நேக்ட் என்ற சர்ச்சைக்குரிய இரண்டு படங்களை இயக்கி வெளியிட்டுள்ள ராம் கோபால் வர்மா சமீப காலங்களில் அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

சர்ச்சைக்குரிய படங்கள்

சர்ச்சைக்குரிய படங்கள்

அமிதாபச்சன், நாகார்ஜுனா, சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களையும் பல பிளாக்பஸ்டர் படங்களையும் கொடுத்து வசூல் மழை பொழிந்த பல படங்களை இயக்கி வந்த ராம் கோபால் வர்மா தற்பொழுது சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி வருகிறார்.

இந்தியில் வெளியிட்டு

இந்தியில் வெளியிட்டு

1989ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் படமான சிவா நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வசூலை வாரி குவித்தது. இவ்வாறு இவர் இயக்கிய சிவா படத்திற்காக பல விருதுகளை பெற்று வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்த ராம் கோபால் வர்மா இந்த படத்தை மொழி மாற்றம் செய்து இந்தியில் வெளியிட்டு அங்கேயும் நல்ல வரவேற்பு பெற்று இந்தியிலும் பிரபலமானார்.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்திய அளவில் அனைவரையும் உற்று நோக்க வைத்த இவருக்கு பல முன்னணி நடிகர்களும் அடுத்தடுத்து தங்களை இயக்க வாய்ப்பு அளித்தனர்.

ரத்தசரித்திரம்

ரத்தசரித்திரம்

இவ்வாறு தெலுங்கிலும் இந்தியிலும் கொடிகட்டி பறந்த ராம்கோபால் வர்மா, தமிழில் சூர்யாவை வைத்து ரத்தசரித்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். மேலும் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து திருடா திருடா, உயிரே போன்ற பல படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இரண்டு படங்களை

இரண்டு படங்களை

இவ்வாறு தனது படங்களின் மூலம் இந்தியாவில் அனைத்து திரைப்பட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வந்த ராம்கோபால் வர்மா இப்போது சர்ச்சைக்குரிய கிளைமாக்ஸ் மற்றும் நேக்கட் என்ற இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார்.

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

சில மாதங்களுக்கு முன்பு ஹாலிவுட் பார்ன் ஆக்ட்ரஸ் மியா மல்கோவாவை வைத்து கிளைமாக்ஸ் என்ற படத்தை இயக்கி தனது சொந்த சேனலில் வெளியிட்டு கல்லா கட்டிய ராம்கோபால் வர்மா அதை தொடர்ந்து தற்பொழுது நேக்ட் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

குஷிப்படுத்தியும்

குஷிப்படுத்தியும்

சில நாட்களுக்கு முன்பு இதன் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தும் குஷிப்படுத்தியும் வந்த நிலையில் இப்போது இந்த நேக்ட் படம் வெளியாகி உள்ளது.

சாதனை படைத்து

சாதனை படைத்து

ராம்கோபால் வர்மாவின் சேனலில் 200 ரூபாய் கட்டணத்தில் வெளியிடப்பட்ட நேக்ட் படம், வெளியாகி 20 மணி நேரத்தில் 35445 பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது என ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்து இருந்தார்.

கழுவி ஊற்றிய

கழுவி ஊற்றிய

இதனைபார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் ராம் கோபால் வர்மா இப்போது ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சொன்ன வாசகம் ஒன்றை மேற்கோள்காட்டி போட்டிருந்த இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களையும் வழக்கம்போல் கழுவி ஊற்றிய விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X