Ram Birthday - கற்றது தமிழில் சர்ச்சையான சீன்.. ராம் சொன்ன போல்டான பதில் என்ன தெரியுமா?
சென்னை: Ram Birthday (ராம் பிறந்தநாள்) இயக்குநர் ராமின் 49ஆவது பிறந்தநாள் இன்று. இந்த சூழலில் அவர் ஒரு சீன் குறித்து அளித்த போல்டான பதிலை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராம். பாலுமகேந்திராவிடம் நா. முத்துக்குமார் மூலமாக உதவி இயக்குநராக சேர்ந்த ராம் அடிப்படையில் இலக்கிய அறிவு ரொம்பவே இருப்பவர். பெரும்பாலும் பிறரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை பாலுமகேந்திரா நிறுத்தியிருந்த நேரம். மேகம் என்ற குறும்பட கதையை பாலுமகேந்திராவிடம் சொல்லி அவரை ஒளிப்பதிவு செய்யவும் ஒத்துக்கொள்ள வைத்தவர்.

முதல் படம்: பாலுமகேந்திராவிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு கற்றது தமிழ் படத்தை முதன்முறையாக இயக்கினார் ராம். ஜீவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. ஆனால் இப்போது பலரும் அதனை கொண்டாடிவருகிறார்கள். அந்த அளவுக்கு அப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் கூர்மையாக அமைத்திருப்பார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் படித்தவரின் நிலைமை என்னவென்பதை பொட்டில் அடித்து சொல்லிய படம். அதனையடுத்து அவர் இயக்கிய தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்கள் அனைத்துமே கிளாசிக். தரமணி மட்டும் கொஞ்சம் சர்ச்சையை சந்தித்தாலும் அதுவும் பாராட்டையே பெற்றது.
பேரன்பு: பேரன்பு படத்தில் அஞ்சலில் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த மம்மூட்டி, என்னையே ஏமாத்தற அளவு உங்களுக்கு எண்ணம் வந்திருக்குனா நீங்க என்னைவிட ஏதோ பெரிய கஷ்டத்தில் இருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்லும்படியான காட்சியை வைக்க ராமால் மட்டும்தான் முடியும். அந்த காட்சியில் அவ்வளவு பாடம் எடுத்திருப்பார் ராம். அதேபோல் திருநங்கையை காற்றில் ஏற்றிக்கொண்டு செல்லும் காட்சி; கடைசியில் அவரை தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டது என்று பேரன்பு உண்மையில் தமிழ் சினிமாவில் எப்போதும் கிளாஸிக்கல்.
கற்றது தமிழ்: ராமை பொறுத்தவரை ஒவ்வொரு காட்சியையும் வீரியமாக வைக்க வேண்டும் என்று மெனெக்கடாமல் தன்னுடைய சிந்தனை என்ன சொல்கிறதோ அப்படி அமைப்பவர். அவர் இயல்பாக எந்த காட்சியை படத்தில் வைத்தாலும் அது வீரியமாகவே அமைந்துவிடுவது அவரது சிறப்பு. ராம் எடுத்த பல காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம். அவர் எடுத்த காட்சிகளிலேயே பெரும் சர்ச்சையை சம்பாதித்தது என்றால் கற்றது தமிழ் படத்தில் Touch Me Here If you Dare என்று வாசகம் எழுதிய டிஷர்ட் அணிந்த பெண்ணின் மார்பகத்தை ஹீரோ தொடுவது போன்ற காட்சி.

அந்த மாதிரி காட்சியை முதல் படத்தில் எடுப்பதற்கு அவ்வளவு பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம் தன்னுடைய சிந்தனையில் சபலம் இல்லாமல் இருந்தால்தான் வரும். அந்தக் காட்சி குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடிய ராம், "நாம் விலங்குகளுக்கு ஒப்பானவர்கள்தான். ஆனால் சில விதிகளுக்கு உட்பட்டு நம்மை நாம் மடித்து வைத்திருக்கிறேன். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் பெரிய மார்பகம் இருக்கும் பெண்ணை பார்க்காமல் இருப்பவர் யார். அதனால் அவன் களங்கமானவன் கிடையாது.
Touch Me Here If You Dare : கற்றது தமிழில் வரும் பிரபாகர் (ஜீவா) எந்த கமிட்மெண்ட்டும் இல்லாதவன். இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவன். வாழ்வதற்கான எந்த நல்ல காரணங்களும் இல்லாதவன் என்ன செய்வான். ஒரு கல்லூரியில் டிகிரியை முடித்துவிட்டு; கற்றது தமிழ் படத்தில் Touch Me Here If You Dare என்ற காட்சியை பார்த்துவிட்டும் ஒரு ஆண் மகன் பெண் மார்பை தொடுவான் என்றால் அந்த பல்கலைக்கழகம் அவனுக்கு என்ன சொல்லிக்கொடுத்தது என்று தெரியவில்லை. அது என்னுடைய பொறுப்பும் இல்லை.
பொறுப்புக்கள் கிடைக்காதவன்: இந்தப் படத்தை ஒரு ரூமில் பார்த்துவிட்டு சூப்பர் படம் சார் ஆனா அந்த சீனை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் என சிலர் சொல்வார்கள். ஏனென்றால் அங்கு ஒரு ஆண் என்பவன் ஆண் என்ற நிலையிலிருந்து நகர்ந்து தான் ஒரு பொறுப்பானவன் என்ற இடத்திலிருந்து பேசுகிறான். ஆனால் இந்தப் படத்தில் இருப்பவன் எந்த பொறுப்பும் இல்லாதவன். அல்லது பொறுப்புக்கள் கிடைக்காதவன்.
தாக்கம் ஏற்படுத்தாது: இன்னும் சொல்லப்போனால் பெயர் சொல்லாத எத்தனையோ படங்களில் ஆடை குறைவான் காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் வருகின்றன. ஏ சர்ட்டிஃபிக்கேட் இருக்கும் படத்தை பார்த்துவிட்டு எத்தனையோ பேர் வெளியே வருகிறார்கள். ஒன்று சொல்கிறேன் ஒரு படம் சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது." என சொன்னார். இப்படி போல்டாக பல விஷயங்களை பேசும் ராமுக்கு தமிழ் ஃபில்மிபீட்டின் பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











