Paranthu Po: தியேட்டரில் கொண்டாடப்பட்ட பறந்து போ.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: கற்றது தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற அழுத்தமான கதைகளை சொன்ன இயக்குநர் ராம் இயக்க்ததில் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதில், சிவா, அஞ்சலி, மிதுல் ரயான், கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ராமின் படத்தை போலவே இந்த படமும், ஒரு கருத்தை சொல்லும் படமாக இருந்தது. சென்னையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மகன் மற்றும் மனைவி குளோரி (கிரேஸ் ஆண்டனி)யுடன் வாழ்ந்து வருகிறார் கோகுல் (மிர்ச்சி சிவா). இந்த தம்பதிகளுக்கு பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், அனைத்தையும் இஎம்ஐயில் வாங்கி, அதற்காக மாதா மாதம் பணம் கட்டும் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். நாம் என்னத்தான் கஷ்டப்பட்டாலும், தங்களது மகனுக்கு இப்படி வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது என நினைத்து இருவரும்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.

Paranthu Po Director Ram OTT
Photo Credit:

பறந்து போ: பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிடுவதால், தனிமையில் இருக்கும் மகன், சேட்டைகள் செய்து, வீட்டையே இரண்டாக்கி, என்னென்மோ செய்து தன் தனிமையை விரட்டுகிறான் அன்பு. இப்படியான சூழலில், தன் தந்தையான சிவாவிடம் அடம்பிடித்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என சொல்ல, இருவரும் ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தில் என்ன நடந்தது, வழியில் இவர்கள் என்னென்ன சம்பவங்கள், மனமாற்றங்கள் நிகழ்கிறது என்பதே பறந்து போ படத்தின் கதை.

எதார்த்தமான கதை: பணத்திற்காக பரபரத்து ஓடும் அவசர வாழ்க்கையில் குழந்தைகளின் உலகத்தையும் ஆசைகளையும் எளிதாக மறந்து விடுகிறார்கள், பெற்றோர்கள். அவர்களின் எதிர்காலத்துக்காக அதிக செலவு செய்து படிக்க வைத்தாலும், விரும்பு கேட்டதை வாங்கி கொடுத்தாலும், குழந்தைகளின் மனது அதில் இல்லை. அவர்கள் தங்கள் இயல்பை, 'குழந்தைமை'யைத் தேடுகிறார்கள் என்பதை, நகைச்சுவையோடும் அக்கறையோடும் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் ராம்.

ஓடிடி ரிலீஸ் தேதி: கடந்த மாதம் ஜூலை 4ந் தேதி தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நல்ல வசூலை அள்ளியது. 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 7.3 கோடியை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. 2025 ஆம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய 5வது தமிழ் படமாக இப்படம் உள்ளது. இந்த படத்தோடு சரத்குமார், தேவயாணி, சித்தார்த் நடித்த 3BHK படம் வெளியானது. இந்த படமும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருந்ததால், பறந்து போ திரைப்படத்தின் வசூல் கணிசமாக பாதிக்கப்பட்டது என்று சொல்லலாம். தற்போது பறந்து போ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 5ந் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி, பெங்காளி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தியேட்டரில் இப்படத்தை கவறவிட்டவர்கள் ஓடிடியில் இந்த படத்தை பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: director ram ott ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X