‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. படக்குழு மகிழ்ச்சி!

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. எந்த படத்தையும் கலைத்தன்மையோடு அணுகக்கூடிய இயக்குநர் ராம் இயக்கிய படம் தான் ஏழு கடல் ஏழு மலை. இத்திரைப்படம் ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. படங்கள் திரைக்கு வரும் முன்பே அதற்கு அங்கீகாரம் கிடைப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படம் 'ஏழு கடல், ஏழு மலை'. 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின் பாலி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

director ram Yezhu Kadal Yezhu Malai Anjali

ஏழு கடல் ஏழு மலை: கருடன் படத்தின் நம்மை பிரம்மிக்க வைத்த நடிகர் சூரி இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த ஜனவரி மாதம் திரையிடப்பட்டு. பிக் ஸ்கிரீன் போட்டிப் பிரிவில் தேர்வாகி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விழாவில், நிவின்பாலி, சூரி, சுரேஷ் காமாட்சி, ராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

director ram Yezhu Kadal Yezhu Malai Anjali

சர்வதேச திரைப்படவிழாவில்: இந்நிலையில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'நோ லிமிட்' எனும் பிரிவில் திரையிடப்பட இருக்கிறது. இந்த தகவலை நடிகர் நிவின் பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மற்றொரு அங்கீகாரத்தால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கதை உருவாக காரணம்: முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் ஏழு கடல் ஏழு மலை படம் உருவானது குறித்து பேசிய இயக்குநர் ராம். ஏழு கடல் ஏழு மலை படம் உருவாகக் காரணம் கடந்த 2019-ல் கொரோனா காலத்தில் மனித குலம் நம்பிக்கையூட்டும் வரலாறு என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்த புத்தகத்தில் மனிதனால் மற்றொருவரை வெறுக்கவோ, துன்புறுத்தவோ முடியாது. மனிதன் தன்னுடைய எல்லா வேறுபாட்டையும் தாண்டி கரம் கோர்த்து நிற்பான் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்த கதை அது.

இந்த படம் பிடிக்கும்: அந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே, ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் எனத் தெரிவித்தார். மேலும், எனது முந்தைய நான்கு படங்கள் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஐந்தாவது படமான ஏழு கடல் ஏழு மலை நிச்சயமாகப் பிடிக்கும் எனவும் இந்த படம் முழுக்க முழுக்க பேசுவது "மானுடத்தின் காதலைப் பற்றியும், இந்த உலகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது எனவும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X