‘சம்பவம்’ எங்களுக்குத்தான் சொந்தம்.. இம்முறை விஜய் படத்துக்கு தலைப்பிலேயே பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு
சென்னை: தளபதி 64 பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தளபதி 64 படத்திற்கு சம்பவம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சம்பவம் என்ற தலைப்பில் விஜய் புகைப்படத்துடன் வெளியான போஸ்டர்கள் சமூல வலைதளங்களில் வைரலானது.

தளபதி 64 தலைப்பு
சம்பவம் எனும் தலைப்பு படத்திற்கு அருமையாக இருக்கிறது என விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் அந்த தலைப்பு தனது படத்திற்கு சொந்தமானது எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்.

இயக்குனர் மறுப்பு
இதுகுறித்து அவர் கூறியதாவது, "நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம்.

படக்குழு அதிர்ச்சி
ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்' என்றார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் தான் சம்பவம் படத்தை தயாரித்து வருகிறார். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வரும் இப்படத்தில், கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











