உணர்வுகளை சிலுப்பிய “முன்னத்தி ஏர்” இளையராஜா! இயக்குனர் ரஞ்சித் புகழாரம்!
மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை ரஞ்சித் புகழ்ந்துள்ளார்
சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
விஜய் சேதுபதி தயாரித்து லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மேற்கு தொடர்ச்சி மலை.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியலையும் அவர்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ள அரசியலையும் இயல்பாக காட்சிபடுத்தியுள்ள படம்.
இப்படத்தை அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர் போன்ற படங்களின் திரைக்கதையில் முக்கிய பங்காற்றிய லெனின் பாரதி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை இயல்பாக பதிவு செய்ததற்காக இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்த படத்தை பார்த்த காலா திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
போலித்தனம் அல்லாத,எளிமை மிக்க வாழ்க்கையை நிலத்தோடும், காற்றோடும் மொழியோடும்-அதிகாரத்தால் சுரண்டப்படுகிற மனித முகங்களின் சுருக்கத்தில் வழிந்தோடும் எளிமையான பேரனுபவத்தை மேற்கு தொடர்ச்சி மலை என்னும் மக்களின் சினிமாவில் கொடுத்த இயக்குனர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், தயாரிப்பாளர் விஜய் சேதுபதி மற்றும் இத்திரைப்படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் பெரும் பாராட்டுக்களும், பெரும் மகிழ்ச்சியும்! என ட்விட்டரில் பாராட்டியுள்ளார் ரஞ்சித்.
மேலும், இசைவழியே உணர்வுகளை சிலுப்பிய முன்னத்தி ஏர் இளையராஜா. நன்றியும் மகிழ்ச்சியும் என அடுத்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











