பிரசாந்த் உறவை தூக்கி எறிந்த விக்ரம்.. காரணம் இதுதானா? - மனம் திறந்த இயக்குநர்
சென்னை: நடிகர் பிரசாந்த்துக்கும், விக்ரமுக்கும் இடையே நடந்த பிரச்னைக்கு காரணம் என்ன என்பது குறித்து இயக்குநர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துவருகிறார்.

சேது மூலம் வாழ்க்கை பெற்ற விக்ரம்
தனது கேரியரின் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்களில் விக்ரம் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் சரியாக ஓடவில்லை. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

கமர்ஷியல் ஹிட்டடித்த விக்ரம்
சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கேரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

விக்ரம் Vs பிரசாந்த்
சூழல் இப்படி இருக்க நடிகர் பிரசாந்த் விக்ரமின் உறவுக்காரர் ஆவார். விக்ரமின் தாயும், பிரசாந்த்தின் தந்தையான தியாகராஜனும் உடன் பிறந்தவர்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் விக்ரம் சினிமாவுக்குள் நுழைந்தபோது அவருக்கு பிரசாந்த்தோ, தியாகராஜனோ பெரிதாக உதவவில்லை எனவும் ஒரு பேச்சு உண்டு. அதுமட்டுமின்றி இயக்குநர் பாலா எழுதிய 'இவன்தான் பாலா' என்ற புத்தகத்தில் , 'சினிமாவில் இருக்கும் எனது உறவினர் என்னை பார்த்து ரொம்பவும் கேவலமாக பேசினார்' என தன்னிடம் விக்ரம் கூறியதாக பாலாவும் குறிப்பிட்டிருக்கிறார். அதை படித்த பலரும் அந்த உறவினர் தியாகராஜன்தான் என கூறிவந்தனர்.

விக்ரமுக்கும், பிரசாந்த்துக்கும் என்ன பிரச்னை?
இந்நிலையில் விக்ரமுக்கும், பிரசாந்த் குடும்பத்துக்கும் என்ன பிரச்னை என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் அதுகுறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது் விக்ரம் வீட்டில் நடந்த ஒரு காதல் விவகாரம்தான் விக்ரமுக்கும், பிரசாந்த் குடும்பத்துக்கும் இன்றுவரை பேச்சுவார்த்தை இல்லாத சூழ்நிலையை உருவாக்கியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால் அதுகுறித்து விளக்கமாக அவர் எதையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











