தமிழ்நாடு மாதிரி இந்தியா பேரையும் மாத்துங்க... விஜய்யின் லியோ பட பிரபலம் ஆதங்கம்!
சென்னை: மேயாத மான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார்.
அதனைத் தொடர்ந்து அமலா பால் நிர்வாணமாக நடித்த ஆடை படத்தை இயக்கியிருந்தார்.
அதேபோல், லோகேஷ் கனகராஜ்ஜுடன் மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து தற்போது லியோவிலும் வசனகர்த்தாவாக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே ரத்னகுமார் இயக்கிய குலுகுலு திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் அவரது அனுமதியில்லாமல் சென்சார் போர்டு காட்சியை நீக்கியது சர்ச்சையாகியுள்ளது.

ரத்னகுமாரின் குலு குலு
2017ல் வைபவ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து பரபரக்க வைத்தார். இதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு சந்தானம் நடித்த குலு குலு படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். காமெடியாக உருவான குலு குலு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

தெலுங்கு வெர்ஷனில் சென்சார் கட்
குலு குலு திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. ஆனால், அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'இந்திய பிரதமர்' என்ற ஒரு காட்சியை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. ஆனால், படத்தின் இயக்குநர் ரத்னகுமாரிடம் இதுகுறித்து அனுமதி கேட்கவில்லை. அதேபோல், குறிப்பிட்ட அந்த காட்சி மட்டும் ஏன் நீக்கப்பட்டது என சென்சார் போர்டு விளக்கமும் கொடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான இயக்குநர் ரத்னகுமார், டிவிட்டரில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா பெயரை மாற்றிவிடலாம்
அந்த டிவிட்டர் பதிவில், "ஜனநாயகத்தில் கலை என்பது முக்கியமான தூண். அத்தகைய கலை மீது சென்சார் போர்டு மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறது. தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயல்வதற்கு பதில் இந்தியாவை United States of India என பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்" என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். ரத்னகுமாரின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரத்னகுமாருக்கு ஆதரவு
சென்சார் போர்ட்டின் இந்த செயல்பாடு குறித்து விமர்சனம் செய்துள்ள ரத்னகுமாருக்கு பலரும் ஆதரவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். லோகேஷ் கனராஜ்ஜின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார், மாஸ்டர், விக்ரம் படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளர். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்திலும் ஸ்கிரிப்ட் ரைட்டிங்கில் லோகேஷுடன் கைகோர்த்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் லியோ படத்தின் அப்டேட் கொடுத்திருந்த ரத்னகுமார், தற்போது சென்சார் போர்டை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











