Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜுடன் தலைவர் 171 படத்தில் இணையாத ரத்னகுமார்.. ஏன் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படத்தை ரசிகர்களை கவரும்வகையில் கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் சாதனை புரிந்துள்ளது. படம் 600 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் லோகேஷ். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக 600 கோடி ரூபாய்களை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக விஜய் -லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Director Rathna kumar not part of Thalaivar 171 movie script work with Lokesh kanagaraj

லியோ படம்: லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக படத்தின் இரண்டாவது பாதியில் அதிகமான லாஜிக் மீறல்கள் சுட்டிக் காட்டப்பட்டன. இந்நிலையில் இந்த விஷயங்களை தான் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் இதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இதை தன்னுடைய அடுத்தப்படமான தலைவர் 171 படத்தில் கவனத்தில் கொண்டு செயல்பட உள்ளதாகவும் லோகேஷ் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார். லியோ படத்தின் சூட்டிங்கின்போதே தலைவர் 171 படத்திற்கான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171 படம்: இந்நிலையில் தற்போது தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் ஈடுபட்டுள்ளார். இன்னும் 2 -3 மாதங்களில் இந்த ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடையும் என்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து தலைவர் 171 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் ஆக்ஷன் ஜானரில் நீண்ட காலங்களுக்கு பிறகு அதிகமான ஆக்ஷன்களுடன் ரஜினியை வைத்து ஸ்கிரிப்ட் தயாரிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இயக்குநர் ரத்னகுமார்: மாஸ்டர், விக்ரம், லியோ படங்களில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து ரத்னகுமார் செயல்பட்டார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜின் ஸ்கிரிப்ட் டீமில் அவர் இடம்பெறவில்லை என்று லோகேஷ் தெரிவித்துள்ளார். தன்னுடைய இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்தப்படத்தின் வேலைகளில் ரத்னகுமார் பிசியாக உள்ளதால் தலைவர் 171 படத்தில் இணையவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து மலையாளம், கன்னட மொழிகளின் புதிய இயக்குநர்கள் உள்ளிட்ட புதிய டீமுடன் இணைந்து லோகேஷ் தற்போது செயல்பட்டு வருகிறார்.

தலைவர் 171 படத்தில் ரன்வீர் சிங்?: படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்துவரும் சூழலில் தற்போது முக்கியமான கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடனும் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய படமான ஜெயிலர் படத்தை போலவே இந்தப் படத்திலும் அதிகமான நடிகர்களுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தத்தில் லியோ படத்தின் கலவையான விமர்சனங்களை இந்தப் படத்தில் லோகேஷ் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X