நீங்க உண்மையிலேயே துரதிர்ஷ்டசாலி.. அமலாபாலை இப்படி சொல்லிட்டாரே ஆடை படத்தின் இயக்குநர்!

சென்னை: ஆடைப்படத்தின் இயக்குநரான ரத்னகுமார் அமலா பாலை நீங்கள் உண்மையிலேயே துரதிர்ஷ்டசாலி என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரத்னகுமார் நடிகை அமலா பாலின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்ற ஒரு செய்தியே படத்திற்கு பெரிய விளம்பரமாக உள்ளது.

போதா குறைக்கு கடந்த மாதம் வெளியான டீசரும் அண்மையில் வெளியான ட்ரெயிலரும் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டிவிட்டுள்ளது. ஆடை படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தகவல்

தகவல்

ஆடை படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படம் குறித்து நாள்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. படக்குழுவினரும் சமூக வலைதளங்களில் படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

துரதிர்ஷ்டசாலி

துரதிர்ஷ்டசாலி

இந்நிலையில் ஆடை படத்தின் இயக்குநரான ரத்னகுமார், டிவிட்டரில் பதிவிட்டுள்ள டிவிட்டில் படத்தின் ஹீரோயினான அமலா பாலை நீங்கள் உண்மையிலேயே துரதிர்ஷ்டசாலி என குறிப்பிட்டுள்ளார்.

சந்திக்காத அமலா பால்

சந்திக்காத அமலா பால்

எதற்காக என்றால் ஆடை படத்தில் பாடகி சுசீலா ஒரு பாடலை பாடியுள்ளார். இதற்காக அவர் ஸ்டுடியோவிற்கு வந்துள்ளார். ஆனால் அப்போது அமலா பால் ஸ்டுடியோவிற்கு வராமல் சுசீலாவை சந்திக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டார்.

திரையில்..

இதைத்தான் ரத்னகுமார், தனது டிவிட்டர் பக்கத்தில், நிஜத்தில் சுசீலாமாவை சந்திப்பதை நீங்கள் துரதிர்ஷ்டவசமாக தவறவிட்டு விட்டீர்கள். திரையில் வரும் பாடலுக்கு நீங்கள் முழு தேவையையும் தருவீர்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதிகமாக கொடுத்திருக்கிறேன்

ரத்னகுமாரின் டிவிட்டை தனது பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ள அமலா பால் ஆமாம் தவற விட்டுவிட்டேன் என கண்ணீர் விடும் ஈமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும் நீங்கள் எதிர்பார்த்ததை விடவுடம் அதிகமாக கொடுத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்றும் அமலாபால் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X