எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கங்க.. படம் அதைவிட அதிகமா கொடுக்கும்.. லியோ குறித்து ரத்னகுமார் பளிச்!
சென்னை : நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா இணைந்துள்ள நிலையில், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

லியோ படம்
நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ், விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். படம் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் சூட்டிங்
படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கி, கொடைக்கானலில் தொடர்ந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் காஷ்மீருக்கு சென்றுள்ளனர். அங்கு கடந்த சில தினங்களாக சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தனி விமானம் மூலம் படக்குழுவினர் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர்.

லியோ திருவிழா
விஜய் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்த இந்த பயணத்தின் வீடியோவும் வெளியிடப்பட்டது. படத்தின் டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்களை லியோ திருவிழாவாக தயாரிப்புத் தரப்பு வெளியிட்டது. தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.

இயக்குநர் ரத்னகுமார் உற்சாகம்
இந்நிலையில் படத்தின் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருவதாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் அதிகமாக வைத்துக் கொள்ளுமாறும் படம் அதை விட அதிகமாகவே தரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

3 நாட்களில் காஷ்மீர் பயணம்
லியோ படத்தில் திரைக்கதை மற்றும் வசனத்தை தான் எழுதவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள ரத்னகுமார், இதற்கென தான் இன்னும் 3 நாட்களில் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கும் ரத்னகுமார் வசனம் எழுதியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











