Rathna Kumar: லோகேஷ் தயாரிப்பிலிருந்து விலகிய ரத்னகுமார்? என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்களை லீட் கேரக்டர்களில் வைத்து லியோ படத்தை எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அடுத்ததாக ரஜினியின் தலைவர்171 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
இதனிடையே தன்னுடைய உதவி இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

லோகேஷ் தயாரிப்பிலிருந்து விலகினாரா ரத்னகுமார்?: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் சென்சார் நிறைவு செய்யப்பட்டு, யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளன.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படம் குறித்த தன்னுடைய பகிர்வுகளை தொடர்ந்து கொடுத்துவருகிறார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லியோ படம் குறித்து மட்டுமில்லாமல், அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அடுத்ததாக தலைவர்171 படத்தில் லோகேஷ் இணையவுள்ள நிலையில், அந்தப்படத்தின் அப்டேட்களையும் அவரது பேட்டிகளில் பார்க்க முடிந்தது.
மேலும் அடுத்தடுத்து தயாரிப்பாளராகவும் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக தன்னுடைய உதவி இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் லோகேஷ் படம் தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், நயன்தாரா இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து நடிகை நயன்தாரா தற்போது விலகியுள்ளார்.

இதையடுத்து இந்தப் படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்திலிருந்து ரத்னகுமார் விலகியுள்ளதாகவும் லோகேஷ் தயாரிப்பில் அடுத்ததாக ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் அவர் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படத்திலிருந்து ரத்னகுமார் விலக மற்றொரு காரணம் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய்யின் உள்வட்ட மேனேஜரும், லியோ படத்தின் கோ ப்ரொட்யூசருமான ஜெகதீஷ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பிலிருந்து, ஜெகதீஷ் தயாரிப்பில் இணைய ரத்னகுமார் ஒப்புதல் தெரிவித்து விட்டதாக தற்போது கூறப்படுகிறது. லோகேஷ் -ரத்னகுமார் இடையில் சிறப்பான புரிதல் இருந்து வந்தது. லியோ படத்திலும் ரத்னகுமார் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் லோகேஷ் தயாரிப்பிலிருந்து விலகியுள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











