For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சாந்தி காலனில நீ ஃபேமஸ் .. மாஸ்டர் துணை கதாசிரியர் வெளியிட்ட பிக்ஸ்!

  |

  சென்னை : இயக்குனர் ரத்ன குமார் தனது முகநூலில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து, "சாந்தி காலனில நீ ஃபேமஸ் " என தனது படத்தின் வரும் பாடல் வரிகளை கூறி இருக்கிறார்.

  தலைகீழாக விழுந்த Victor Arun Vijay terrific workout | Mafia, Yennai Arindhal, Sinam

  தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு தினம் தினம் கோடம்பாக்கத்தை நோக்கி செல்லும் இளைஞர்கள் அதிகம். ஆனால் அதில் முழு மூச்சாக வேலை செய்தவர்கள் தான் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக உருவாகியுள்ளனர்.

  அப்படி தன் கடின உழைப்பால் இன்று பல இளம் இயக்குனர்களுக்கு முன்னோடியாக திகழ்பவர்தான் நம் மேயாத மான் இயக்குனர் ரத்ன குமார் அவர்கள். இவர் மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியுள்ளார். தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் விஸ்காம் முடித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த இவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், வேலையை விட்டு பின் துணை இயக்குனராக பணிபுரிந்தார். மிகவும் சின்சியராக பல வருடம் உழைத்தார்.

  முந்தானை முடிச்சு ரீமேக்.. பாக்கியராஜ் உடன் கைகோர்த்த சசி குமார்.. முருங்கை காய் காமெடி இருக்குமா?முந்தானை முடிச்சு ரீமேக்.. பாக்கியராஜ் உடன் கைகோர்த்த சசி குமார்.. முருங்கை காய் காமெடி இருக்குமா?

   முதல் படம்

  முதல் படம்

  பல போராட்டங்களுக்கு பின் 2017ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் தயாரிப்பில் மேயாத மான் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். நல்ல டாக் என்று சொல்லும் அளவிற்கு அந்த படம் மக்கள் மத்தியில் ஓரளவு பேசபட்டது . மேலும், வசூல் ரீதியாகவும் நல்ல படம் என்ற பெயரை பெற்றும் தந்தது.

   படம் ரசிக்கும் படி இருந்தது

  படம் ரசிக்கும் படி இருந்தது

  தீபாவளி அன்று தளபதி விஜயின் மெர்சல் திரைப்படத்தோடு மேயாத மான் வெளிவந்து பலரிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் இந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இதில் வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த கானா பாடல்கள் அனைவராலும் இன்றளவும் ரசிக்கும் படி இருக்கிறது.

   கானா சாங்

  கானா சாங்

  மேயாத மான் படத்தில் அட்ரஸ் சாங் எனும் சூப் சாங் இருக்கும் . அதில் முழுக்க முழுக்க கதாநாயகியின் வீட்டு முகவரியை பற்றி மட்டுமே உருவாக்க பட்டிருக்கும், அவ்வாறு அந்த பாடலில் சாந்தி காலனி என்ற பெயர் வரும். இந்த பெயர் ஏற்கனவே நடிகர் சத்யராஜ் அவர்கள் நடித்த ஒரு படத்தின் காட்சிகளில் வரும். பலரை அட்டாக் செய்தது இந்த கானா என்று சொல்லலாம் .

   க்யூட்டான டான்ஸ்

  க்யூட்டான டான்ஸ்

  ரத்ன குமார் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண்குழந்தை பிறந்தது அதற்கு குரலினியாள் என்ற அழகான தமிழ் பெயரும் சூட்டியுள்ளார். இந்நிலையில் தனது மகள் புகைப்படங்களையும் அவள் செய்யும் குறும்புகளையும் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார். அவ்வாறு சில நாட்கள் முன் குரலினியாள் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம க்யூட்டாக கை கால்களை அசைத்து நடனமாடியிருந்தார் அதை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு அந்த பாடலை இசையமைத்திருந்த அனிருத் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.

   சாந்தி காலனில நீ ஃபேமஸ்

  சாந்தி காலனில நீ ஃபேமஸ்

  தனது மகள் வீட்டின் பக்கத்திலுள்ள ஒரு தெருவில் மிதிவண்டியில் உட்கார்ந்து கொண்டு இருப்பது போன்று அழகாய் சிரித்தபடி போஸ் கொடுத்திருப்பார் அதன் பின்னால் சாந்தி காலனி புது நகர் என ஒரு பெயர் பலகை வைத்திருக்கும். அந்த புகைப்படத்தை ரத்ன குமார் தனது முகநூலில் பகிர்ந்து "சாந்தி காலனில நீ ஃபேமஸ் " என தனது படத்தின் வரும் பாடல் வரிகளை கூறி சிலாகித்திருந்தார். இப்போது நிஜமாவே சாந்தி காலனி, ரத்ன குமாரைவிட அவரது மகள் குரலினியாள் தான் ரொம்ப ஃபேமஸ். குழந்தைகளை கொண்டாடும் அப்பாக்கள் பலரும் இந்த லாக் டவுன் சமயத்தில் பல போட்டோஸ் , வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

  English summary
  Director Rathna Kumar shared a photo of her baby on her Facebook
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X