ஓ அப்படியா.. புதுப்பேட்டை படம் பார்க்கலன்னா டாக்டரா ஆகியிருப்பேன்.. ஆடை இயக்குநரின் அடடே ட்வீட்!

சென்னை: நடிகர் தனுஷின் 37வது பிறந்தநாள் நள்ளிரவு முதலே தனுஷ் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

Dhanush மதுரை Gangster எனக்கு Villain • James Cosmo Interview | Karthick Subbaraj

துள்ளுவதோ இளமை படத்தில் பருவம் வந்த பள்ளி மாணவனாக அறிமுகமான தனுஷ், டான் சுருளியாக ஜகமே தந்திரம் படத்தில் அதகளம் செய்ய உள்ளார்.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் ரத்னகுமார் தனது ஸ்டைலில் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்.

பக்கா கிளாஸ் டு தர லோக்கல்

பக்கா கிளாஸ் டு தர லோக்கல்

பக்கா கிளாஸ் படங்களானாலும், படு மாஸ் படங்களானாலும், தர லோக்கல் படங்களானாலும் நடிகர் தனுஷ் இறங்கி நடிப்பார். காதல், சைக்கோ, காமெடி, பரிசோதனை, ஆக்‌ஷன், திரில்லர், மாஸ் மசாலா என அனைத்து விதமான படங்களிலும் நடித்து தள்ளி இருக்கிறார் நடிகர் தனுஷ். 37வது பிறந்தநாளை கொண்டாடும் நடிப்பு அசுரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குவிகிறது வாழ்த்து

குவிகிறது வாழ்த்து

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் பல ஹாஷ்டேக்குகளை உருவாக்கி சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகின்றனர். இயக்குநர் ரத்னகுமார் தனுஷின் புதுப்பேட்டை படம் குறித்து பேசியுள்ளார்.

டாக்டர் கூட ஆயிருப்பேன்

டாக்டர் கூட ஆயிருப்பேன்

"ஒரு படத்த பாத்துட்டு அந்த பாதிப்புல படத்துல கூட இல்லாத Look ல சுத்துன படம் னா அது இந்த எமகாதக புதுப்பேட்டை தான். இந்த மாதிரி படம் லாம் பார்க்கலைன்னா நான் சினிமாக்குலாம் வந்திருக்கவே தேவ இல்ல. டாக்டர் கூட ஆயிருப்பேன். ஹேப்பி பர்த்டே தனுஷ் சார்" என மேயாதமான், ஆடை படங்களின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் ட்வீட் போட்டிருக்கிறார்.

ரசிகர்கள் கலாய்

ரசிகர்கள் கலாய்

வர வர உங்க அலப்பறை தாங்கள, எப்போவுமே ஒரு மாதிரியாத்தான் ட்வீட்டே போடுறீங்க, எமகாதகன், அந்த லொல்லு தான வேணா, மாஸ்டர் டிரைலர் எப்போ பாஸ் விடுவீங்க, நீங்க டாக்டரா? என இயக்குநர் ரத்னகுமாரின் அடடே ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள் பங்கமாக அவரை கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை 2

புதுப்பேட்டை 2

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா நடிப்பில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம், தமிழ் சினிமாவின் கேங்ஸ்டர் படங்களில் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் டாப் இடத்திலேயே இருக்கிறது. புதுப்பேட்டை 2 படத்தை தனுஷை வைத்து இயக்கப் போவதாக செல்வராகவன் அறிவித்த நிலையில், அந்த படத்திற்காக ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X