Director Rathnakumar: கார்த்தியின் சர்தார் 2 படத்தில் இணைந்த ரத்னகுமார்.. அப்ப லோகேஷ் கூட்டணி?

சென்னை: நடிகர் கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் பூஜை வரும் பிப்ரவரி 2ம் தேதி போடப்படவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப்படத்தின் சூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்தான் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நடித்துவரும் கார்த்தி இந்தப் படங்களை முடித்துவிட்டு சர்தார் 2 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்தார் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் கார்த்திக்கு சிறப்பாக அமைந்தது. ஜிவி பிரகாஷ் இசையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பூஜை இன்னும் இரு தினங்களில் போடப்பட உள்ளன. இந்தப் படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ள நிலையில் படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இந்தப் படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Director Rathnakumar joined with PS Mithran for Karthis Sardar 2 movie

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் கார்த்திக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. ஆனால் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான ஜப்பான் படம் சொதப்பியது. இந்நிலையில் தற்போது கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இதில் கார்த்தி 26 படத்தை நலன் குமாரசாமியும் கார்த்தி 27 படத்தை பிரேம்குமாரும் இயக்கி வருகின்றனர்.

சர்தார் 2 படம்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக சர்தார் 2 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கார்த்தி. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்த நிலையில், தற்போது சர்தார் 2 படம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் பூஜை வரும் பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் போடப்படவுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ளார். முதல் பாகத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், இரண்டாவது பாகத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

சர்தார் 2 கூட்டணியில் ரத்னகுமார்: இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குநர் ரத்னகுமார், பிஎஸ் மித்ரனுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜூடன் லியோ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றிய ரத்னகுமார், ரஜினியின் காக்கா -கழுகு பேச்சு குறித்து லியோ படத்தின் வெற்றிவிழாவில் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இவர் தற்போது லோகேஷின் தலைவர் 171 படத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ள நிலையில், ரத்னகுமாரின் சர்ச்சைப் பேச்சுதான் தலைவர் 171 படத்திலிருந்து அவர் நீங்க காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது.

தலைவர் 171ல் இணையாத ரத்னகுமார்: இதனிடையே தன்னுடைய தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்க ரத்னகுமார் புதிய படத்தை இயக்குவதாகவும் அதனால்தான் தலைவர் 171 படத்தில் அவர் இணையவில்லை என்றும் லோகேஷ் கனகராஜ் முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். ஆனால் இந்தப் படமும் துவங்குவதாக இல்லை. இதற்கும் ரத்னகுமாரின் சர்ச்சை பேச்சு தான் காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ள சர்தார் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ரத்னகுமார் இணைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X