இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்!

சென்னை: விஜயின் மாஸ்டர் படம் குறித்து மேலும் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

மாஸ்டர் படத்திற்கு யு/ஏ சர்டிஃபிகேட்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர்.

கைதி படம் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இரண்டு ஜாம்பாவன்களை இப்படத்தில் இயக்கியிருக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு படப்பிடிப்பின் போதில் இருந்தே எகிறி வருகிறது.

ஏப்ரல் வரை இல்லை

ஏப்ரல் வரை இல்லை

கடந்த மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது இப்படம். ஆனால் லாக்டவுன் காரணமாக போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகிறது. படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த போதும் கூட ஏப்ரல் மாதம் வரை படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் பார்த்து வந்தனர் படக்குழுவினர்.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

ஆனால் கடந்த சில வாரங்களாக மாஸ்டர் படம் குறித்து ஒவ்வொரு தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோருடன் இணைந்து 'மாஸ்டர்' கதையை எழுதிய பொன் பார்த்திபன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிஜ வாழ்க்கையில் ஒரு நபரின் கதையால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக கூறினார்.

ஒரு டயலாக்..

ஒரு டயலாக்..

அவரை தொடர்ந்து சமூக வலைதள லைவில் பேசிய மாஸ்டர் படத்தில் நடித்திருக்கும் நடிகர் அர்ஜூன் தாஸ், மாஸ்டர் ட்ரெயிலரில் வரும் ஒரு டயலாக் பெரிதும் பேசப்படும் என்றார். மாஸ்டர் படம் குறித்து பேசிய ஆண்ட்ரியா படத்தில் தங்களுக்கு ஒரு கார் சேஸிங் காட்சி உள்ளது என்றும் அந்த காட்சி தனக்கு மறக்க முடியாத காட்சி என்றும் தெரிவித்தார்.

இன்டர்வெல் பிளாக்

இன்டர்வெல் பிளாக்

இந்நிலையில் ஆடை படத்தின் இயக்குநரும், மாஸ்டர் படத்தின் இணை எழுத்தாளருமான ரத்னகுமார் படம் குறித்து ஆன்லைன் நியூஸ் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் மாஸ்டர் படத்தின் இன்டர்வெல் பிளாக் வேற லெவலில் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு பக்கம் கவலை

ஒரு பக்கம் கவலை

ரத்னகுமார் கூறிய இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபக்கம் நாள் தோறும் படம் குறித்த தகவல் வெளியாகி வருவதால் எரிச்சல் அடைந்துள்ளனர். படம் ரிலீஸ் ஆவதற்குள் இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக படத்தின் மொத்த கதையும் வெளியே வந்துவிடும் போல என விஜய் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X