Leo Update - இந்த விஷயத்தில் மாஸ்டரைவிட லியோதான் பெஸ்ட்.. இயக்குநர் சொன்ன அப்டேட்

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தின் இடைவேளை காட்சி எப்படி இருக்கும் என இயக்குநரும், வசனகர்த்தாவுமான ரத்னகுமார் கூறியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை,திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. மாஸ்டரில் ஏற்கனவே விஜய்யும், லோகேஷும் இணைந்து மாஸ் காட்டியிருந்ததால் லியோவிலும் அவ்வாறே நடக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் இருக்கின்றனர்.

Director Rathnakumar Shares about a Leo Movie Interval scene Update

அப்டேட்டுகள்: லியோ படத்திலிருந்து சிறு விஷயம்கூட லீக் ஆகாமல் பார்த்துக்கொண்டனர் படக்குழுவினர். இந்தச் சூழலில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடிதான் என்று விஜய் பாடிய பாடலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகின. பாடல் பெரும் வரவேற்பை பெற்று இளைஞர்களிடையே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதேசமயம் பாடலின் வரிகள் விமர்சனத்தையும் சந்தித்தன. எனவே பாடல் படத்தில் வரும்போது ஏதேனும் மாற்றத்துடன் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்: அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றது. விஜய்யின் கையில் பெரிய சுத்தியலுடன் பற்கள் பறக்க ரத்தம் தெறிக்க தெறிக்க அந்த போஸ்டர் இருந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் தங்களுக்கு செம ட்ரீட் இருக்கிறது என கூறிவந்தனர். படத்தின் கதையும் கேங்ஸ்டர்களை மையப்படுத்தியதுதான் என்று ஷூட்டிங் ஆரம்பித்தபோதே தகவல்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன.

சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ்: இதற்கிடையே படத்தின் மெயின் வில்லனாக நடித்திருக்கும் சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அவருக்கான க்ளிம்ப்ஸ் கடந்த மாதம் வெளியானது. அதேபோல் ஹரோல்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் அர்ஜுனுக்கான க்ளிம்ப்ஸ் கடந்த 15ஆம் தேதி வெளியானது. அந்த இரண்டு க்ளிம்ப்ஸுகளுமே பெரும் வரவேற்பைப் பெற்றன.

Director Rathnakumar Shares about a Leo Movie Interval scene Update

இடைவேளை காட்சி எப்படி இருக்கும்: இந்நிலையில் லியோ படத்தின் இடைவேளை காட்சி எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குநரும் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, 'மாஸ்டர் இடைவேளை காட்ச அருமை. விஜய் ஏற்றிருந்த கதாபாத்திரங்களிலேயே ஜேடி கதாபாத்திரம் எனக்கு பிடித்தது. ஜேடி ஒரு வைப்' என குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து ரசிகர் ஒருவர் லியோ படம் வெளியான பிறகு நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா என கேட்டதற்கு, ஆம் நூறு சதவீதம் மாறும் என தெரிவித்தார். மாஸ்டர் படத்தின் இடைவேளை காட்சியில் ஐ அம் வெயிட்டிங் என்ற விஜய்யின் வசனத்தை விஜய் சேதுபதியை பேச வைத்திருப்பார் லோகேஷ். எனவே தற்போது மாஸ்டர் படத்தைவிட லியோ இடைவேளை காட்சி நன்றாக இருக்கும் என ரத்னகுமார் சொல்லியிருப்பதால் இந்தப் படத்தின் இடைவேளையில் லோகேஷ் கனகராஜ் என்ன சர்ப்ரைஸ் வைத்திருப்பாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X