தளபதியோட பீஸ்ட் அப்டேட் இல்லாம தீபாவளியா? இதோ நம்ம அப்டேட் கிங் வந்துட்டாரே.. அப்போ இருக்கு!
சென்னை: ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் புரமோஷன்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் தளபதி ரசிகர்களை கண்டு கொள்ளவே இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பீஸ்ட் அப்டேட்டுக்கான சிக்னல் உடன் நம்ம அப்டேட் கிங் இயக்குநர் ரத்னகுமார் வந்துள்ளார் என அவரது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அண்ணாத்த படம் ரிலீசானதும் நாளை பீஸ்ட் படம் குறித்த மாஸான அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் பிசி
ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் காரணமாக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களை சன் பிக்சர்ஸ் கண்டு கொள்ளவே இல்லை. எதற்கும் துணிந்தவன் மற்றும் பீஸ்ட் படம் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் வெளியானால் தீபாவளியை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அப்டேட் கிங்
இந்நிலையில், பீஸ்ட் பட அப்டேட்டுக்கான சிக்னல் உடன் மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநரும் மாஸ்டர், விக்ரம் படங்களின் வசனகர்த்தாவும் ஆன நம்ம அப்டேட் கிங் இயக்குநர் ரத்னகுமார் போட்டுள்ள ட்வீட் தளபதி ரசிகர்களுக்கு நிச்சயம் சீக்கிரமே அப்டேட் கிடைக்கும் என்கிற நம்பிக்கை கொடுத்துள்ளது.

தளபதி இல்லாத தீபாவளியா
இந்த தீபாவளி தலைவர் தீபாவளியாக மாறியுள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் பீஸ்ட் பட அப்டேட் இல்லாமல் தீபாவளியை எப்படி கொண்டாடுவது என காத்திருந்த நிலையில், பீஸ்ட் பட ஸ்டிக்கர் ஒட்டிய பட்டாசுகளின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

அப்டேட் வரும்
அண்ணாத்த திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், நிச்சயம் இந்த தீபாவளிக்கு தளபதி ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு பீஸ்ட் படம் தொடர்பான மாஸ் அப்டேட்டையும் சன் பிக்சர்ஸ் விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சிக்னலாகவே இயக்குநர் ரத்னகுமாரின் இந்த ட்வீட் பார்க்கப்படுகிறது.

500 கோடி வசூல்
பிகில் திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படும் நிலையில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 500 கோடி வசூலை குவிக்க வேண்டும் என்கிற ஆசையை தளபதி ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை குவித்த நிலையில், இதே போல தளபதியை வைத்தும் அவர் தரமான சம்பவத்தை செய்தால் அந்த இலக்கு சாத்தியம் என ரசிகர்கள் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











