விஜய்யுடன் பிரபல இயக்குனர்.. அரிய புகைப்படம் வைரலானது!

சென்னை: பிரபல இளம் இயக்குனர் ரத்னகுமார் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

மேயாத மான், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இப்பொழுது மாஸ்டர் திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.

தீவிரமான விஜய் ரசிகரான இவர் சிறுவயதில் தான் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது இப்பொழுது வைரலாகி வருகிறது.

இயக்குனராக அறிமுகம்

இயக்குனராக அறிமுகம்

2017ம் ஆண்டு வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான மேயாத மான் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரைத் துறைக்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார்.

ஆடையில்லாமல் அமலாபால்

ஆடையில்லாமல் அமலாபால்

பல்வேறு குறும்படங்களை இயக்கி பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று வந்த ரத்னகுமாரின் முதல் திரைப்படமான மேயாத மான் அனைவரையும் கவர்ந்து வெற்றிபெற்ற நிலையில், அடுத்த திரைப்படமே அதிரடியாக இருக்க வேண்டும் என எண்ணிய இவர் ஆடையில்லாமல் அமலாபாலை நடிக்க வைத்தார்.

சமூக கருத்தை மையமாகக் கொண்டது

சமூக கருத்தை மையமாகக் கொண்டது

மிகப் புதுமையான கதைக்களத்துடன் சமூக கருத்தை மையமாகக் கொண்டு உருவான ஆடை திரைப்படம் மற்ற தமிழ் இயக்குனரிடம் இருந்து இவரை ரசிகர்களுக்கு வித்தியாசமாக காட்டிய நிலையில் இவரின் அடுத்தடுத்த திரைப்படங்களை எதிர்பார்த்து பலரும் காத்துக் கொண்டிருந்தனர்.

மாஸ்டர்

மாஸ்டர்

ஆடை திரைப்படத்தை தொடர்ந்து இவர் நிச்சயமாக பெரிய நடிகருடன் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்றும் எதிர்பாராதவாறு விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகர்

விஜய்யின் தீவிர ரசிகர்

இவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களிலேயே மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கும் ரத்னகுமார் சிறு வயது முதலே விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வந்த நிலையில் இப்போது விஜய் நடிக்கும் திரைப்படத்திலேயே பணியாற்றி உள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.

பழைய புகைப்படம்

பழைய புகைப்படம்

இந்நிலையில் "பிரியமுடன்" படப்பிடிப்பில் குடும்பத்தாருடன் இணைந்து விஜய்யுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை ரத்னகுமார் தனது முகப் புத்தகத்தில் வெளியிட்டு "நான் மற்றும் எனது சகோதர சகோதரிகளுடன் பிரியமுடன் படத்தின் படப்பிடிப்பில் விஜய் சாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்" என சிலாகித்து பதிவிட்டிருக்கும் இந்த புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

விடா முயற்சியால்

விடா முயற்சியால்

ஒரு ரசிகனாக இருந்து சினிமாவின் மீது கொண்ட காதலாலும் விடா முயற்சியாலும் இன்று விஜய்யின் திரைப்படத்தில் பணியாற்றிவரும் ரத்னகுமாரின் கடின உழைப்பு பலராலும் பாராட்டப்பட்டு வரும் அதேசமயம் இந்த அரியப் புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X