விஜய்யை தாக்கி மோசமாக பேசிய சீமான்.. வேலுநாச்சியாரா? லட்சுமி பாயா?.. கிண்டலடித்த ரத்னகுமார்!

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து கடந்த அக்டோபர் 27ம் தேதி பிரம்மாண்டமாக விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் மாநாடு நடத்தினார். சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்யின் மாநாடு வெற்றி என ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். நான் வரும்போதெல்லாம் இப்படி மக்கள் வரவேற்பு கொடுக்கவில்லை என புலம்பிய சீமான் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் விஜய்யை மொத்தமாக கிழித்தெடுத்து பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

vijay seeman rathnakumar

நம்மளோட சில பேர் வரலாமில்லையா என அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் விஜய். ஆனால், விஜய்யின் மாநாடு எதிரொலி காரணமாக திருமாவளவன் மற்றும் சீமான் தொடர்ந்து புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய்யை எதிர்க்கும் தொனியில் பேசி வருவது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தையே காட்டுகிறது என்றும் நம்முடைய அரசியல் எதிரி திமுக தான் சின்ன கட்சிகள் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்றும் விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

#கூமுட்டை_விஜய்: சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்த சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து பல தேர்தல்களை சந்தித்துள்ளார். அரசியலுக்கு வந்த பிறகும் சினிமாவிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் LIK படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய்யை கூமுட்டை விஜய் என அவர் தரக்குறைவாக பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரசியல் அறிவே இல்லாமல் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றும் சாலையில் ஒன்று இந்த பக்கம் நில்லு, இல்லை அந்த பக்கம் நில்லு நடுரோட்டில் நின்றால் லாரி அடித்து செத்துடுவாய் என மிகவும் மோசமாக அரசியல் நாகரீகமே இல்லாமல் பேசியதற்கு விஜய் ரசிகர்கள் சீமானை ட்ரோல் செய்தும் திட்டியும் வருகின்றனர். அதே நேரத்தில் விஜய்யின் ஹேட்டர்கள் #கூமுட்டை_விஜய் ஹாஷ்டேக்கை போட்டு விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர்.

vijay seeman rathnakumar

சீமானை கலாய்த்த ரத்னகுமார்: விஜய்க்கு வேலு நாச்சியார் யார் என்றே தெரியாது என சொல்லி விட்டு வேலு நாச்சியார் கதை தெரியுமா என சீமான் சொன்னது முழுக்க முழுக்க ஜான்சி ராணி கதை என்றும் அது வேலு நாச்சியார் கதையே கிடையாது என செய்தி சேனலில் வெளியான செய்தியை ஷேர் செய்து கும்கி படத்தின் பாப்புலரான தம்பி ராமைய்யா டெம்பிளேட் மீமை போட்டு இயக்குநர் ரத்னகுமார் சீமானை கலாய்த்துள்ளார். விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் கீழ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இனிதான் ஆரம்பம்: அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் சொல்லக் காரணமும் நமக்கு ஏன் வீண் வம்பு நாம நல்லா சம்பாதித்து செட்டில் ஆனால் போதும் என பலரும் நினைக்க காரணமே இதுபோன்ற சிலர் ஆக்கப்பூர்வமான அரசியலை செய்யாமல் ஆரம்பத்திலேயே அடியெடுத்து வைப்பவரை அடியோடு அழிக்க வேண்டும் என பேசுவது தவறான செயல் என விஜய் ரசிகர்கள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X