குழந்தை அழற சத்தம் கேட்குது.. ரமேஷ் பாலாவை வச்சு செய்த ’லியோ’ ரத்னகுமார்.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: லியோ டிசாஸ்டர் என ஆரம்பத்தில் கூறி வந்த ரமேஷ் பாலா திடீரென லியோ 400 கோடி வசூல் செய்துள்ளதாக ட்வீட் போட ஆரம்பித்த நிலையில், விஜய் ரசிகர்களே ஒண்ணுமே புரியல ஒரே குழப்பமா இருக்கு என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், லியோ படத்தின் துணை வசனகர்த்தா மற்றும் கதையாசிரியரான ரத்னகுமார் பீஸ்ட் படத்தில் விஜய் பேசும் எங்கேயோ குழந்தை அழற சத்தம் கேட்குதே என்பதை போட்டு பொளந்துள்ளார்.

அவரது ட்வீட்டை பார்த்து ஹேப்பியான விஜய் ரசிகர்கள் இனிமேல் இந்த ரமேஷ் பாலாவை இப்படி தான் வெளுக்கணும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கட்சி மாறிய ரமேஷ் பாலா: ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்தில் அதிகபட்சமாக 375 கோடி வசூல் ஈட்டியதாக ரமேஷ் பாலா முன்னதாக ட்வீட் போட்டிருந்த நிலையில், லியோ படம் தோல்வி படம் என்றும் வசூல் எல்லாம் வராது என ஆரம்பத்தில் சொல்லி வந்தார். லியோ படம் 500 கோடி வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியான நிலையில், 400 கோடி வசூலை லியோ ஈட்டியுள்ளதாகவும், 500 கோடியை விரைவில் எட்டும் என்றும் தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

ரத்னகுமார் கலாய்: இந்நிலையில், இதுவரை லியோ படத்தின் எதிர்மறை ட்வீட்களுக்கு வாய் திறக்காமல் அமைதியாக இருந்து வந்த ரத்னகுமார் ரமேஷ் பாலாவின் ட்வீட்டை கலாய்த்து விஜய் ரசிகர்கள் போட்ட மீமை ஷேர் செய்து பீஸ்ட் படத்தில் விஜய் பேசும் எங்கேயோ குழந்தை அழற சத்தம் கேட்குதே என்பதை போட்டு தன் பங்குக்கு வச்சு செய்துள்ளார்.
மனோபாலா தான் சின்சியர்: ரமேஷ் பாலா கட்சி மாறிவிட்டார் என்றும் மனோபாலா விஜயபாலன் தான் சின்சியர் இன்னமும் லியோ படம் வசூல் 300 கோடி கூட தாண்டவில்லை என உறுதியாக அந்த படத்தின் மீது எந்தளவுக்கு வன்மத்தை கக்க முடியுமோ அந்த அளவுக்கு கக்கி வருகிறார் என விஜய் ரசிகர்களே அவரது விஸ்வாசத்தை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











