மரியாதை அதிகரிக்குது.. எஸ்.பி.பிக்கு நடிகர் விஜய் அஞ்சலி.. ரத்னகுமார் நெகிழ்ச்சி #ThalapathyVijay

சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் தளபதி ரசிகர்கள் #ThalapathyVijay ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

SPB உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் • #RIP SPB

அரசு மரியாதையுடன் பாடும் நிலா பாலுவின் பூத உடல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது.

இளையராஜா சொன்னது போல தேவர்களுக்கு பாடவே எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்றுள்ளார் என ரசிகர்கள் கண்ணீர் விட்டு இரங்கல் தெரிவித்தனர்.

காற்றோடு கலந்த இசை

காற்றோடு கலந்த இசை

1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிறந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ம் தேதி இயற்கை எய்தினார். அவருக்கு வயது 74. 1966ம் ஆண்டு பின்னணி பாடகராக தனது இசைப் பயணத்தை தொடங்கிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வரைக்கும் பாடியுள்ளார். அவரது உடல் மண்ணை விட்டு பிரிந்தாலும், என்றுமே இசையாக நம்முடன் காற்றோடு காற்றாக கலந்திருப்பார்.

நேரில் அஞ்சலி

நேரில் அஞ்சலி

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இறுதி அஞ்சலியில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் காலை தொட்டு அவருக்கு இறுதி மரியாதை செய்த வீடியோக் காட்சிகள், புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தீயாய் பரவுகிறது

தீயாய் பரவுகிறது

பிரபல நடிகர்கள் பலர் நேரில் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்���ாத நிலையில், நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு, இசை அரசனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதை தளபதி ரசிகர்கள் #ThalapathyVijay என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். விஜய்யின் புகைப்படங்களையும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

மரியாதை அதிகரிக்கிறது

மரியாதை அதிகரிக்கிறது

#ThalapathyVijay என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், ஆடை பட இயக்குநரும் மாஸ்டர் படத்தின் இணை இயக்குநருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசின் அறிவிப்பு காரணமாகத்தான் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என நினைத்தேன். ஆனால், தளபதி விஜய் கலந்து கொண்ட பிறகு, அது தனிப்பட்ட விருப்பம் என்பது தெரிகிறது. அவர் மீது மரியாதை அதிகரிக்கிறது. இசை உலகின் முடி சூடா மன்னனுக்கு இப்படியொரு மரியாதை கொடுப்பது மிகவும் அவசியம் என பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு நன்றி

வெங்கட் பிரபு நன்றி

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட நடிகர் விஜய், எஸ்.பி.பியின் மகன் சரணிடம் ஆறுதல் கூறி விசாரித்த புகைப்படத்தை பதிவிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு Respect என கரங்களை கூப்பி நிற்கும் எமோஜிகளை போட்டு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவையும் பொருட்படுத்தாது எஸ்.பி.பிக்காக ஓடோடி வந்த விஜய்யை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X