அது மட்டும் நடந்தா வெறித்தனம் தான்.. இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிரபல இயக்குநர் வைத்த கோரிக்கை!

சென்னை: மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக செயல்பட்டார்.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனிடம் ரத்னகுமார் வைத்துள்ள கோரிக்கை ட்வீட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட் படத்தை பார்த்து விட்டுத் தான் இந்த கோரிக்கையை இயக்குநர் ரத்னகுமார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னைடர் கட்

ஸ்னைடர் கட்

ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட் திரையரங்குகளில் வெளியாகி ஏகப்பட்ட டிசி காமிக்ஸ் ரசிகர்களை பரவசப்படுத்தி உள்ளது. பேட்மேன், சூப்பர் மேன், வொண்டர் உமன், ஆக்வாமேன், ஃபிளாஷ் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்கள் இந்த படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

ஆடை இயக்குநர்

ஆடை இயக்குநர்

மேயாத மான், ஆடை படங்களை இயக்கி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ரத்ன குமார், லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் பணியாற்றியுள்ளார். மாஸ்டர் படத்தின் அப்டேட்களை சமூக வலைதளங்களில் கொடுத்து வந்த அப்டேட் கிங்கும் இவர் தான்.

வெற்றிமாறனுக்கு கோரிக்கை

வெற்றிமாறனுக்கு கோரிக்கை

இந்நிலையில், தற்போது ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட் திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ரத்னகுமார், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷுக்கு ஒரு சூப்பரான கோரிக்கை வைத்துள்ளார். வடசென்னை வெற்றிமாறன் கட் என அன்பு, பத்மா, ராஜன், சந்திரா, குணா, செந்தில், தம்பி மற்றும் வேலு ஆகிய முக்கியமான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக காட்சிகளை வைத்து வடசென்னை வெற்றிமாறன் கட் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மூன்று பாகங்கள்

மூன்று பாகங்கள்

வடசென்னை திரைப்படம் வெளியாகும் போதே, மூன்று பாகங்களாக அந்த படம் வெளியாகும் என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார். ஆனால், முதல் பாகம் வெளியானதும் ஏகப்பட்ட விமர்சனங்களும் சர்ச்சைகளும் கிளம்பிய நிலையில், வடசென்னை 2ம் பாகமே வெளியாகுமா? என்பதே தெரியவில்லை. இயக்குநர் வெற்றிமாறனும் அசுரன், சூரி - விஜய்சேதுபதி படம் மற்றும் சூர்யாவின் வாடி வாசல் என படு பிசியில் உள்ளார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஆனால், வடசென்னை படத்திற்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் தரத்தில் தமிழ்ப் படங்களை இயக்கி தேசிய விருதுகள் உள்ளிட்ட உயரிய விருதுகளை தட்டித் தூக்கி வரும் வெற்றிமாறன் வடசென்னை ரசிகர்களையும் கருத்தில் கொண்டு சீக்கிரமே அடுத்த பாகத்தை உருவாக்குவாரா? அல்லது வெப்சீரிஸ்களாக வடசென்னை பாகங்கள் வருமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

விஜய்யுடன் படம்

விஜய்யுடன் படம்

மேயாத மான், ஆடை படங்களை இயக்கி உள்ள ரத்னகுமார், மாஸ்டர் திரைப்படத்தில் இன்னொரு இயக்குநராகவே பணியாற்றி உள்ளார். தளபதி விஜய்க்கு ரத்னகுமாரின் வொர்க் பிடித்துப் போயுள்ள நிலையில், சீக்கிரமே ரத்னகுமாருடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X