நான் ரெண்டு பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது.. பிரபல இயக்குநர் உருக்கம்!

சென்னை: புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பிரபல இயக்குநர் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே புதரில் சடலமாய் கண்டெடுக்கப்பட்டார். அவர் உடல் முழுக்க ரத்தக் காயங்கள் இருந்தன.

பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியை சேர்ந்த ராஜா என்ற 25 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

சிறுமி பலாத்காரம்

சிறுமி பலாத்காரம்

விசாரணையில் சிறுமியை கண்மாய் பக்கம் அழைத்துப் போய் பலாத்காரம் செய்ததையும் அப்போது அவர் கத்தியதால், அருகில் இருந்த கருவேல மரக்கட்டையில் மண்டையை மோதி கொன்றதையும் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடுமையான தண்டனை

கடுமையான தண்டனை

பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் தொடர்பாக தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் #justiceforjayapriya என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நெஞ்சு பதறுது..

நெஞ்சு பதறுது..

இந்நிலையில் பிரபல இயக்குநரும் மாஸ்டர் படத்தின் இணை எழுத்தாளர்களில் ஒருவருமான ரத்னகுமார் இந்த சம்பவம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, முக கவசம் லாம் போட்டுட்டு சிரிச்சி பேசி விளையாடிட்டு இருந்த குழந்தைய இப்படி கொன்னுட்டிங்களேடா, இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல நான் ரெண்டு பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது என டிவிட்டியுள்ளார்.

ஆடை படத்தில்..

ஆடை படத்தில்..

ரத்னகுமார் மேயாதமான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடைசியாக அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகை அமலா பாலை நிர்வாணமாக நடிக்க வைத்ததற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ரத்னகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X