லெஜண்ட் சரவணாவோட அடுத்த இயக்குநர் யாருன்னு பாருங்க.. லியோ படத்துல வொர்க் பண்ணவரா?

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்தவர் என்றால் அது லெஜண்ட் சரவணன் தான். ஏற்கனவே தனது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்திற்காக விளம்பரங்களில் நடித்தவர், அதன் பின்னர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். தி லெஜண்ட் என்ற பெயரிலேயே படத்தில் நடித்தார். இப்படி இருக்கும்போது, அவரது அடுத்த படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருந்தது. இப்படி இருக்கும்போது திரைக்கதை ஆசிரியர் மற்றும் விக்ரம், லியோ போன்ற படங்களில் லோகேஷ் கனகராஜ்க்கு இணை இயக்குநராக பணியாற்றிய ரத்ன குமார் தற்போது லெஜண்ட் சரவணனைச் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிக மூத்த வயதில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர்களுல் லெஜண்ட் சரவணனும் ஒருவர் என்று கூறலாம். முதல் படத்திலேயே ராய் லட்சுமி, ஹாரீஸ் ஜெயராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களமிறங்கியவர் இவர். இப்படி இருக்கும்போது லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த ஆண்டு தீபாவளிக்கே படம் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. இந்த படம் மாஸ், ஆக்‌ஷன், கம்ர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாக உருவாகி உள்ளது என்று அவரே தெரிவித்திருந்தார்.

Director Ratnakumar Meets Legend Saravanan On His Birthday Fans Asking There is Any Collaboration For New Movie

ரத்னகுமார்: இப்படி இருக்கும்போது கமல்ஹாசனின் விக்ரம், விஜய்யின் லியோ படங்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கதை, திரைக்கதை அமைத்ததில் தொடங்கி, படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் ரத்ன குமார். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வி படமாக மாறியதற்கு காரணமே, ரத்னகுமார் அந்த படத்தில் பணியாற்றாமல் இருந்ததுதான் என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது.

சந்திப்பு: இப்படி இருக்கும்போது ரத்னகுமார், தி லெஜண்ட் சரவணன் ஆகியோர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்த சந்திப்பு ரத்னகுமாரின் பிறந்த நாளில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரத்னகுமார், " லெஜண்ட் சரவணனை எனது பிறந்த நாளில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவருடன் இருந்த நேரம் மிகவும் இனிமையான நேரம். மிகவும் உத்வேகம் அளிக்கும் படி இருந்தது. இந்த பிறந்த நாளில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த பலரும் இருவரும் இணைந்து படம் பண்ணப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Director Ratnakumar Meets Legend Saravanan On His Birthday Fans Asking There is Any Collaboration For New Movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X