ஆடை படத்தின் நிர்வாணக் காட்சிகள்.. வைராகும் மீம்ஸ்.. அமலா பாலிடம் இயக்குநர் கூறியது என்ன?
சென்னை: ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணக் காட்சிகளை வைத்து சமூக வலைதளங்களில் வைரலாகும் மீம்ஸ் குறித்து இயக்குநர் ரத்னகுமார் டிவிட்டியுள்ளார்.
ஆடை படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்த டீசர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் படம் குறித்தும் அமலா பால் குறித்தும் நாள்தோறும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
டீசரில் உயர்ந்த கட்டடம் ஒன்றில் அமலா பால் நிர்வாணமாக அமர்ந்திருப்பது போன்றும், பலர் மேலே பார்ப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் டீசரில் பரபரப்பாக காட்டப்பட்டுள்ளன.

நிர்வாணக்காட்சிகள்
அமலா பாலின் நிர்வாணக் காட்சிகள் 20 நாட்கள் படமாக்கப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய படத்தின் இயக்குநர் அமலாபால் பாதுகாப்பான ஆடையை அணிந்துதான் நடித்தார் ஆகையால் அதுகுறித்து விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

வைரலாகும் மீம்ஸ்
இந்நிலையில் அமலா பாலின் நிர்வாணக் காட்சிகளை வைத்து சமூக வலைதளங்களில் வடிவேலுவுடன் இணைத்து மீம்ஸ்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அமலா பாலிடம் வருத்தம்
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ரத்ன குமார் நடிகை அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். மீம்ஸ் போடுவது அவரவர் கருத்து சுதந்திரம், இப்போது எல்லாவற்றுக்கும் வடிவேலுவின் மீம்ஸ் வெளியிடப்படுகிறது.

சுய ஒழுக்கம்
இதற்கு ஆடை படமும் விதிவிலக்கு அல்ல, ஆடை படம் சுய ஒழுக்கத்தை பற்றி பேசும் படம் என கூறியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார். படத்தின் டீசர் வெளியான சில மணி நேரத்திலேயே 5 மில்லியன் வியூஸ்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











