Director Ravikumar: அயலான் 2 படத்திற்கு தயாராகும் ரவிக்குமார்.. அப்ப சூர்யா படம்?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள படம் அயலான். ஏலியனை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

பொங்கல் ரிலீசாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஜி வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

Director Ravikumar going to start working for Ayalaan 2 movie it seems

ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களும் அயலான் படத்தில் நடித்துள்ள நிலையில் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

சிவகார்த்திகேயனின் அயலான் படம்: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். இன்று நேற்று நாளை படத்தின்மூலம் சிறப்பான கவனத்தை பெற்ற ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான். இந்தப் படத்தின் சூட்டிங் பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்துள்ள நிலையில் சிஜி வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தொடர்ந்து பல மாதங்களாக தள்ளிப் போகிறது. முன்னதாக படம் தீபாவளிக்கே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ளது.

இயக்குநர் ரவிக்குமார்: ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது இன்று நேற்று நாளை. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டிலேயே சூட்டிங்கை துவங்கியது அயலான் படம். ஏலியனை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்ட நிலையில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அயலான் படம்: படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள நிலையில், சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏறக்குறைய 7 ஆண்டுகளாக இந்தப் படம் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அயலான் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

தள்ளிப்போன ரிலீஸ்: முன்னதாக பேட்டியொன்றில் பேசிய ரவிக்குமார் இன்று நேற்று நாளை படத்தை காட்டிலும் அயலான் படத்தின் பட்ஜெட் 25 மடங்கு என்பதை குறிப்பிட்டார். கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்ததை சுட்டிக் காட்டிய ரவிக்குமார் பிறகு திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். அடுத்தகட்டமாக கொரோனா உள்ளிட்டவற்றால் சூட்டிங் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த 50 சதவிகித சூட்டிங்கை நடத்த 3 ஆண்டுகள் ஆனதையும் சுட்டிக் காட்டினார்.

தாமதமாகும் சூர்யா படம்: தற்போது அயலான் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் அடுத்ததாக சூர்யாவுடன் ரவிக்குமார் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அடுத்த ஆண்டு ஜுலை மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவம் கூறப்பட்டது. படத்தை எஸ்ஆர் பிரபு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளதால் இரு ஆண்டுகளுக்கு பிறகே இது சாத்தியப்படும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அயலான் 2விற்கு திட்டம்: குழந்தைகள் மட்டுமில்லாமல் குடும்பத்தினர் கொண்டாடும்வகையில் அயலான் படம் உருவாகியுள்ளதால், படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக சூர்யாவின் பிராஜெக்ட்டும் தள்ளிப்போகும் நிலையில் அதுவரை ரவிக்குமார் காத்திருக்காமல் அயலான் 2 படத்தை உருவாக்குமாறு தயாரிப்பாளர் மற்றும் சிவகார்த்திகேயன் தரப்பு கூறியுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. அதனால் அடுத்ததாக ரவிக்குமார் அதற்கான வேலைகளில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X