Director Ravikumar: என்னை சிவகார்த்திகேயன் சந்தேகமே படலை.. இயக்குநர் ரவிக்குமார் உற்சாகம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். முன்னதாக அவரது நடிப்பில் வெளியான மாவீரன் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகிவந்த அயலான் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் சிஜி வேலைகள் பாக்கியிருந்ததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான். இந்தப் படத்தில் ஏலியனை வைத்து கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் ரவிக்குமார். இந்தப்படத்தின் ரிலீஸ் தாமதமாகியுள்ள போதிலும் படத்தின் கதைக்களம் எப்போதும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை அவர் கொடுத்துள்ளார். மறுபுறம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சென்னை தாஜ் கோரமண்டலில் நடந்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன்: அயலான் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் நடைபெற்றுவரும் நிலையில் படத்தில் ரெமோ ஸ்டைலில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஏலியனுடன் சிவகார்த்திகேயன் செல்ஃபி: நேரடியாக உள்ளே சென்ற சிவகார்த்திகேயன், அங்கு வைக்கப்பட்டிருந்த ஏலியன் உருவ பொம்மையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் இது அயலான் பொங்கல் என்று உற்சாகம் தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் விவேக், இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் சைலன்சும் ஒரு இசைதான் என்று பாராட்டு தெரிவித்தார். இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மானின் பாடல்கள் மிகப்பெரிய பலம் என்றும் அவர் கூறினார்.
5 மடங்கு உழைத்த ஏஆர் ரஹ்மான்: நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான் தான் நினைத்ததை காட்டிலும் படத்திற்காக 5 மடங்கு உழைக்க வேண்யது இருந்தது என்று குறிப்பிட்டார். இந்தப் படத்திற்காக 3 மாதங்கள் தொடர்ந்து வேலை செய்ததாகவும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் மாரி செல்வராஜ், படத்தை நினைத்ததை போல எல்லார் முன்னாடியும் நிப்பாட்டி, பெரிய அளவில் கொண்டு வந்துள்ளதாகவும் அது மிகப்பெரிய விஷயம் என்றும் கூறினார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சிவகார்த்திகேயனை பாராட்டிய ரவிக்குமார்: இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் சப்போர்ட் மிக அதிகமாக இருந்ததாக அவர் குறப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் தன்னை எந்த இடத்திலும் சந்தேகிக்கவில்லை என்றும் தன்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தியதாகவும் அவர் கூறினார். தான் எப்போதுமே அவருக்கு ஸ்பெஷல் என்றும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து கூறியது தனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அயலான் படத்தின் VFX உலகத்தரத்தில் அமைந்துள்ளதாகவும் படத்தில் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Zoom காலில் பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்: ஏஆர் ரஹ்மானுடன் Zoom காலில் பேசி நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கான வரிகளை 3 மணிநேரத்தில் நிறைவு செய்துள்ளார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை தான் அருகிலிருந்து பார்த்ததாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தான் எப்போதுமே நம்பர்களில் கவனம் செலுத்துவதில்லை என்றும் தனக்கு உணர்ச்சிகள்தான் முக்கியம் என்றும் கூறியுள்ள ரவிக்குமார், அயலான் படத்தை பார்த்துவிட்டு வெளியில் செல்லும் ரசிகர்கள், நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் செல்வார்கள் என்றும் அதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











