எனக்கு ஒழுங்கா நடிக்க வரலை.. கே எஸ் ரவிக்குமார் சார் எனக்காக காலை பிடித்தார்!

சென்னை : மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் உருவாகியுள்ளது

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் வயதான முதியவராக நடித்துள்ளார்

தர்ஷன் மற்றும் லாஸ்லியா இந்த படத்தில் லீட் ரோலில் நடித்திருக்க தர்ஷனுக்கு ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை என்று கேஎஸ் ரவிக்குமார் காலை பிடித்து நடித்து காட்டியுள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

மாடலிங் துறையில் சிறந்து விளங்கி திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த தர்ஷனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். யாராக இருந்தாலும் துணிந்து பேசும் தில்லு,நேர்மையான விளையாட்டு என பிக்பாஸில் இவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அவரைக் கொண்டாட ஆரம்பித்தனர்

குறைந்த ஓட்டால் வெளியேற்றப்பட்டார்

குறைந்த ஓட்டால் வெளியேற்றப்பட்டார்

சண்டை என்று வந்தாலும் சரி விளையாட்டிலும் சரி தர்ஷன் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தியதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வருவார் என அனைவராலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பாராத சூழலில் சில வாரங்களுக்கு முன்னரே தர்ஷன் குறைந்த ஓட்டால் வெளியேற்றப்பட்டார்.அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார் தர்ஷன். இப்பொழுது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்

கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா

மலையாளத்தில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படம் தமிழ் ரீமேக் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து வருகிறார். ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இந்த படத்தை இயக்கி உள்ளனர்.தமிழ் ரசிகர்களுக்காக ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த படம் முழுக்க முழுக்க காமெடி சென்டிமென்ட் கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது

கே எஸ் ரவிக்குமார் தர்ஷன் காலை

கே எஸ் ரவிக்குமார் தர்ஷன் காலை

தர்ஷக்கு ஜோடியாக இந்த படத்தில் லாஸ்லியா நடித்துள்ளார். நடிகர் சிம்பு இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டதை அடுத்து நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் கூகுள் குட்டப்பா பட விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தர்ஷன் படப்பிடிப்பில் ஒரு முக்கியமான காட்சியை எடுக்கும் போது தனக்கு சரியாக நடிக்க வரவில்லை என அந்த காட்சியில் கே எஸ் ரவிக்குமாரின் காலை பிடித்து அழுவது போல இருக்கும். அந்த காட்சியை என்னால் சரியாக நடிக்க முடியவில்லை என கே எஸ் ரவிக்குமார் தர்ஷன் காலை பிடித்து எப்படி நடிக்க வேண்டும் என செய்து காட்டியுள்ளார்.இது தனக்கு மிகப்பெரிய பாக்கியம் என படப்பிடிப்பில் நடந்த மறக்க முடியாத தருணத்தை தர்ஷன் மேடையில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X