Director Ravikumar: VFX செலவு மட்டுமே 4 மடங்கு இருக்கும்.. அயலான் 2 குறித்து பேசிய ரவிக்குமார்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் -இயக்குநர் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகியுள்ளது அயலான். பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ள இந்தப் படம் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகி வந்தது. படத்தின் சூட்டிங்கை 85 நாட்களில் இயக்குநர் முடித்ததாக முன்னதாக பேட்டியொன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். ஆனால் படத்தின் VFX வேலைகள் அதிக காலங்களை எடுத்துக் கொண்ட நிலையில் சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய படக்குழுவினர் படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர். படத்தின் ட்ரெயிலர் ஜனவரி 5ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்தும் நிகழ்ச்சியில் இயக்குநர் ரவிக்குமார் பேசினார். படத்தின் முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், முதல் பாகத்திற்கு ரசிகர்களிடையே கிடைக்கும் வரவேற்பை அடுத்து இரண்டாவது பாகத்திற்கான பணிகளை துவங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கான கதையை சிவகார்த்திகேயனிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

Director Ravikumar opens up about Ayalaan movie Part 2

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அயலான். இந்தப் படம் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் பொங்கல் ரிலீசாக படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஏலியனை மையமாக வைத்து கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். முன்னதாக இன்று நேற்று நாளை என்ற சிறப்பான படத்தை கொடுத்துள்ள இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படமாக உருவாகியுள்ளது அயலான். இந்தப்படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

சிறப்பான நடந்த இசை வெளியீடு: இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்தனர். இந்தப் படத்திற்காக தான் 5 மடங்கு உழைக்க வேண்டியிருந்ததாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தெரிவித்திருந்தார். மேலும் ஹாலிவுட் படங்களான ட்ரான்ஸ்பார்மர், பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஆகிய படங்களின் தரத்தில் அயலான் படம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏஆர் ரஹ்மான் இசை: ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஜெயம் பாகுபலி, கேஜிஎப் படங்களை போல அயலான் படம் ரசிகர்களை கவரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து இயக்குநர் ரவிக்குமார் தற்போது இன்டர்வியூ மூலம் பேசியுள்ளார். படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை தான் சிவகார்த்திகேயனிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டதாகவும் அயலான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அயலான் 2 படத்தின் பணிகள் துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பார்ட் 2 குறித்து ரவிக்குமார்: மற்ற படங்களின் பார்ட் 2 போல, இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் அமையாது என்றும் இந்தப் படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் அவர் குறப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்தப் படத்தின் VFX வேலைகள் மட்டுமே முதல் பாகத்தை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கேற்பவே இரண்டாவது பாகத்தின் பணிகள் திட்டமிடப்படும் என்றம் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனை போலவே அவரும் சம்பளம் பெறவில்லை என்றும், படத்தின் வெற்றியை தொடர்ந்தே தான் சம்பளம் பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளம் பெறாத ரவிக்குமார்: இந்தப் படத்தில் வேலை செய்ததற்காக பல்வேறு தரப்பில் சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் செய்ததாகவும் தனக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்ததாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார். சம்பளம் குறித்து தான் அதிகமாக யோசிக்கவில்லை என்றும் படம் வெளியாக வேண்டும் என்பதே தனது முக்கியமான குறிக்கோளாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மாதந்தோறும் தன்னுடைய செலவுகளை சமாளிக்கும் வகையில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே வாங்கிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் தனக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்ததால் தான் எந்தவிதத்திலும் நெருக்கடியை சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X