நாங்களும் பண்ணுவோம்ல.. சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக போட்டோ வெளியிட்ட பிரபல இயக்குநர்!
சென்னை: சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பிரபல இயக்குனர் ஷேர் செய்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் உருவான டாக்டர படத்தின் ரிலீஸ் கொரோனா பரவல் மற்றும் லாக்டவுன் காரணமாக தள்ளி போகிறது.

அடுத்தடுத்து 5 படங்கள்
மேலும் அயலான், டான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் 5 படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

தோட்டத்தில் போட்டோஸ்
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தோட்டத்திற்கு மகளுடன் சென்றார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் தனது தோட்டத்தில் இருந்தப்படியே போட்டோக்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
Recommended Video

வைரலாகும் போட்டோஸ்
அந்த போட்டோவுக்கு என் வீட்டு தோட்டத்தில் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. பலரும் அந்த போட்டோக்களை லைக் செய்திருந்தனர்.

மாடி தோட்டம்
இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இயக்குநர் ரவிக்குமாரும் தனது மாடி தோட்டத்தில் மகளுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு எங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் என கேப்ஷன் கொடுத்துள்ளார் ரவிக்குமார்.

அயலான் படம்
ரவிக்குமார் 2015ஆம் ஆண்டு வெளிவந்த "இன்று நேற்று நாளை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை இவர்தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











