Ayalaan Teaser - அயலான் டீசர் எப்போது?.. கொஞ்சம் வெயிட் பண்ண்ங்க.. இயக்குநர் சொன்ன அப்டேட்

சென்னை: Ayalaan Teaser (அயலான் டீசர்) அயலான் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட்டை இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் கடைசியாக அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். அவர் இதற்கு முன்னதாக நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமின்றி ஒரு வாரத்துக்குள்ளாகவே திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் பெரும் அப்செட் ஆனதாக கூறப்பட்டது.

Director Ravikumar Reveals Ayalaan Movie Teaser Update

மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் படம் கொடுத்த அடிக்கு அடுத்ததாக மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். படம் ஜூலையில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்துக்காக உடலை ஏற்றி வேற லுக்கில் இருக்கும் சிவாவின் புகைப்படம் சமீபத்தில் ட்ரெண்டானது.

அயலான்: இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒருவழியாக படம் இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. மேலும் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

Director Ravikumar Reveals Ayalaan Movie Teaser Update

டீசர் எப்போது?: இந்தச் சூழலில் அயலான் டீசர் மாவீரன் படத்தோடு ரிலீஸாகும் அல்லது இந்த வாரத்தில் ரிலீஸாகும் என தகவல் ஒன்று வேகமாக பரவிவந்தது. அதுகுறித்து படத்தின் இயக்குநர் ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில், " தீபாவளிக்கு அயலான் படம் வெளியாகிறது என்பதால் வரும் அக்டோபருக்குள் கிராபிக்ஸ் வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிடும். இன்னொரு விஷயம், படத்தின் டீசர் இப்போது வருவதாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை. சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் ரிலீஸுக்குப் பிறகே, 'அயலான்' படத்தின் டீசர் வெளிவரும்" என்றார்.

தாமதம் ஏன்?: முன்னதாக அயலான் படம் தாமதம் ஆனது குறித்து விளக்கம் அளித்திருந்த படக்குழு, "அயலான் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை சமரசம் செய்துகொள்ளாமல் உருவாக்கவே இந்த தாமதம். பான் இந்திய படங்களுக்கு நிகரான கிராஃபிக்ஸ் காட்சிகள் அயலான் படத்தில் உள்ளது.

இந்தப் படத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அயலானில் வரும் வேற்றுகிரகவாசி கேரக்டர் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக 4500 VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக அயலான் இருக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X