அழகுராஜாவைத் தொடர்ந்து ‘என்றென்றும் புன்னகை’யிலும் சந்தானத்தின் வசனம் நீக்கம்

சென்னை: பெண்களை இழிவு படுத்துவது போல் அமைந்த சந்தானத்தின் வசனத்தை 'என்றென்றும் புன்னகை' படத்திலிருந்து நீக்கி விட்டார்களாம்.

சந்தானத்திற்கு இப்போது நேரம் சரியில்லை போலும், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி கொண்டிருக்கிறார். காமெடி நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து தனி ஹீரோயின், பாடல் என கலக்கிக் கொண்டிருந்த சந்தானம், சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் இப்போது என்றென்றும் புன்னகை பட ட்ரைலரில் வந்த வசனமும் பிரச்சினையாகியுள்ளது.

அறிமுகம்...

அறிமுகம்...

சிம்புவால் அறிமுகம் செய்யப் பட்ட சந்தானம், அதற்கு முன்னர் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டிருந்தார்.

காமெடி ஹீரோ...

காமெடி ஹீரோ...

சந்தானத்தின் இன்ஸ்டண்ட் காமெடிகளால் ஓடிய படங்களும் உண்டு. ஒரு காலகட்டத்தில் சந்தானம் தான் படத்தின் ஹீரோ என்பது போல வந்த படங்களும் உண்டு. ஆனால், சமீபகாலமாக சந்தானத்தின் டயலாக்குகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஆல் இன் ஆல் அழகு ராஜா....

ஆல் இன் ஆல் அழகு ராஜா....

அந்தவகையில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் புகையிலை எதிர்ப்பு விளம்பரத்தை கலாய்க்கிறார் என எதிர்ப்புக் கிளம்பியது. பலத்த எதிர்ப்புகளுக்குப் பின்னர் உடனடியாக அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்கினார் அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ்.

இது காமெடியா...?

இது காமெடியா...?

இந்நிலையில் என்றென்றும் புன்னகை டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், ஒரு காட்சியில் சந்தானம் ஒரு துணை நடிகையுடன் பேசும் போது ஐந்து பத்துக்கு போறேன்ணு சொல்லிறியே அழகா தானே இருக்க ஆயிரம் ஐநூறுக்கு போனால் என்ன என்று பேசிய காமெடி வசனம் சர்ச்சையை கிளப்பியது.

 நீக்கம்....

நீக்கம்....

இந்த வசனத்திற்கு பெண்கள் அமைப்புகளும், சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து சந்தானம் பேசிய சர்ச்சைக்குரிய காமெடி வசனம் என்றென்றும் புன்னகை டிரெய்லரில் இருந்தும், படத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X